2000 ரூபாய் நோட்டை கொண்டு நகை வாங்க போறீங்களா? ஜாக்கிரதை!

2000 Rupees Note: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.    

Written by - RK Spark | Last Updated : May 22, 2023, 02:19 PM IST
  • ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெரும் ஆர்பிஐ.
  • செப்டம்பர் 30க்குள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம்.
  • மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் பலர் திகைப்பில் உள்ளனர்.
2000 ரூபாய் நோட்டை கொண்டு நகை வாங்க போறீங்களா? ஜாக்கிரதை! title=

2000 Rupees Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டை திரும்பப் பெற முடிவு செய்த பிறகு, பல சில்லறை நகை வியாபாரிகள் அதிகளவில் ரூ.2000 தொகையை மாற்றும்போது வாடிக்கையாளர்களிடம் ஆதார் மற்றும் பான் கார்டின் நகலைக் கேட்கின்றனர்.  வரி ஆய்வுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவே நகை வியாபாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  அதிகளவில் ரூ.2000 நோட்டை மாற்றும் நபர்களின் ஆதார் அல்லது பான் கார்டு இருந்தால் வரி ஆய்வில் அந்த நபர்களே விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் நகை வியாபாரிகளுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.  கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.  எந்த ஒரு வங்கி கிளையிலும் ஒருவர் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம் மற்றும் டெபாசிட்டர்களுக்கு எவ்வித வரம்பும் இல்லை, ஆனால் கேஒய்சி விதிமுறைகள் பொருந்தும்.

மேலும் படிக்க | இளைஞர்களே உஷார்! இந்த விஷயங்களை தினமும் செய்து வந்தால் உடனே மாற்றுங்கள்!

2016-ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாங்கியதற்காக பல நகைக்கடைக்காரர்கள் கடுமையான வரி சோதனையை எதிர்கொண்டனர். அனைத்து 139 கடைகளிலும் கேஒய்சி உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.2000 நோட்டுகளை ஏற்றுக்கொள்வோம் என்று ஐபிஓ பிணைய சென்கோ கோல்ட் அண்ட் டயமண்ட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.  கேஒய்சி என்பது வாடிக்கையாளரை அறிந்து கொள்ள உதவுகிறது, இதில் பான் மற்றும் ஆதார் அட்டை நகல்களின் ஆதாரம் இருக்கும்.  புனேவைச் சேர்ந்த பிஎன் காட்கில் அன்ட் சன்ஸ் நிறுவனம் சார்பில், மூன்று மாநிலங்களில் 29 கடைகளில் ரூ.2000 நோட்டுகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  மறுபுறம், மும்பையின் நகை வியாபாரிகள் பலர் ரூ.20,000, ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஆதாரமாக பான் மற்றும் ஆதார் அட்டைகளை கேட்பதாக கூறப்படுகிறது.

பிஎம்எல்ஏ விதிமுறைகள் ஒரு நபருக்கு ரூ. 50,000 வரை கேஒய்சி-இலவச பண விற்பனையை பரிந்துரைக்கின்றன.  ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான விற்பனைக்கு ஆதார் போன்ற தனிப்பட்ட அடையாளச் சான்று தேவை, அதற்கு மேல் எதற்கும் பான் கார்டு அவசியம்.  கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று நள்ளிரவு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தது. பணமதிப்பிழப்பு குறித்து அறிவிக்கப்பட்ட உடனேயே கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் நகை மற்றும் சொகுசுக் கடைகளில் தங்களது பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கி சேர்த்துள்ளனர்.  கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனுடன் பலரது வரி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: ஊதியத்தில் பம்பர் 44% ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News