வங்கி கணக்கு முடங்கிவிடும்... உடனடியாக ஆன்லைனில் இதை செய்யுங்க - முழு விவரம் இதோ!

Bank KYC Update: KYC விவரங்களை முறையாக அப்டேட் செய்யாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என்பதால் அந்த செயல்முறையை ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 7, 2023, 07:11 PM IST
  • KYC என்பது வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்.
  • இது அவர்களின் அடிப்படை தகவலை வங்கிகளுக்கு தெரிவிப்பதாகவும்.
  • KYC விவரங்களை அவ்வப்போது புதுப்பித்தல் அவசியம்.
வங்கி கணக்கு முடங்கிவிடும்... உடனடியாக ஆன்லைனில் இதை செய்யுங்க - முழு விவரம் இதோ! title=

Bank KYC Update: நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) விதிக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றின் கீழ் இயங்குகிறது. மேலும், நாடு முழுவதும் நிதி அமைப்பைப் பாதுகாப்பானதாக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு KYC (Know Your Customer) என்பதை அவ்வப்போது அப்டேட் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. 

இருப்பினும், வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ சென்றுதான் KYC விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பதில்லை. KYC விவரங்களை அப்டேட் செய்யும் செயல்முறையை எளிதாக்க, இந்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் KYC விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் சேவையையும் வழங்கியுள்ளது. இதில் செல்லுபடியாகும் ஆவணங்களை வாடிக்கையாளர்கள் இதன் மூலம் சமர்பிக்க வேண்டும். மக்கள் இப்போது தங்கள் KYC தகவலை வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.

KYC விவரம்

KYC என்பது வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் அடையாளம் தொடர்பான தகவல்களை எடுத்து அதைச் சரிபார்க்கும் ஒரு பிரத்யேக செயல்முறையாகும். வங்கிக் கணக்கைத் திறக்கும்போதோ அல்லது பிற நிதி சார்ந்த அமைப்புகளில் முதலீடு செய்யும் போதோ அதன் வாடிக்கையாளர்கள் KYC செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | iPhone15: மார்க்கெட்டில் உலாவும் ஐபோன் 15 போலிகள்! உஷார் மக்களே...

உங்கள் கணக்கு தொடர்பான KYC விவரங்களை புதுப்பிக்கும்படி உங்கள் வங்கி உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும். இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கு உத்தரவாதம் அளிக்க, KYC செயல்முறையை மீண்டும் நடத்த வேண்டும்.

உங்கள் கணக்கு முடக்கப்படலாம்

KYC விவரங்களை அவ்வப்போது புதுப்பித்தல் அவசியம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆபத்துக் கால விவரத்தின் அடிப்படையில் தகவல்களைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PAN அல்லது படிவம் 60-ஐ சமர்ப்பிப்பதன் மூலம் தங்களின் விவரங்களை திருத்தலாம். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கு முடக்கப்படலாம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்குள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

உங்கள் KYC விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், KYC புதுப்பிப்பை ஆன்லைனில் செய்யலாம்.  ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA) அட்டை போன்ற ஆவணங்கள் KYC-க்கு செல்லுப்படியாகும் ஆணவங்களாகும்.ஆன்லைனில் எப்படி KYC அப்டேட்டை மேற்கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம்.

ஆன்லைனில் KYC-ஐ அப்டேட் செய்வது எப்படி?

- உங்கள் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் இணையத்தளத்தில் உள்நுழையவும்.

- 'KYC' ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

- உங்களுக்கு அதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் படித்து பின்பற்றவும். உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

- செயல்முறையை முடிக்க பான், ஆதார் மற்றும் தேவையான பிற ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும்.

- அனைத்து செயல்முறைகளையும் முடித்த பிறகு, 'Sumbit' ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் வங்கி இதைப் பற்றி SMS அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கும்.

மேலும் படிக்க | Flipkart Big Billion Days Sale: 15,000 ஆயிரம் விலையில் டாப் 7 ஸ்மார்ட்போன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News