Amazon அதிரடி: ரூ. 26,000 Oppo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,000-க்கு வாங்கலாம்

சுமார் 26 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் ஸ்மார்ட்போனை, அமேசான் சலுகையில், பழைய தொலைபேசியை மாற்றி சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 02:28 PM IST
  • OPPO F19 Pro + 5G ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB வேரியன்ட்டின் விலை ரூ .29,990 ஆகும்.
  • அமேசான் டீல் ஆஃப் தி டேயில் ரூ .4,000 தள்ளுபடியுடன் இந்த போனை வாங்கலாம்.
  • பழைய தொலைபேசியை எக்ஸ்சேஞ் ஆஃபரில் மாற்றினால், ​சுமார் 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
Amazon அதிரடி: ரூ. 26,000 Oppo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,000-க்கு வாங்கலாம்  title=

Amazon Offer: அமேசானில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான பல தள்ளுபடி விற்பனைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதில் வேறு எங்கும் கிடைக்காத பல தள்ளுபடிகளும் சலுகைகளும் கிடைக்கின்றன.

‘அமேசான் டீல் ஆஃப் தி டே’-வில், அமேசான் (Amazon) ஒவ்வொரு நாளும் அற்புதமான சலுகைகளை கொண்டு வருகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி குறைந்த விலையில் பொருட்களை வாங்காதவர்கள் மிகவு துரதிஷ்டசாலிகள்தான்.

இன்று அதாவது, செப்டம்பர் 28 அன்று, OPPO F19 Pro + 5G ஸ்மார்ட்போனில் (Smartphone) மிகச் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் இந்த சலுகை இன்றைக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

OPPO F19 Pro+ 5G இல் சலுகைகள்

OPPO F19 Pro + 5G ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB வேரியன்ட்டின் விலை ரூ .29,990 ஆகும். ஆனால், அமேசான் டீல் ஆஃப் தி டேயில் (Amazon Deal of the Day), ரூ .4,000 தள்ளுபடியுடன் இந்த போனை ரூ .25,990 க்கு வாங்கலாம். கூடுதலாகவும் பல சலுகைகள் உள்ளன. நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் தொலைபேசியை வாங்கினால், 12,250 ரூபாய்க்கான நன்மை கிடைக்கும்.

ALSO READ: அசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும்

பழைய தொலைபேசியை எக்ஸ்சேஞ் ஆஃபரில் (Exchange Offer ) மாற்றினால், ​சுமார் 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம். அதாவது, அமேசான் சலுகையில் சுமார் 26 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் ஸ்மார்ட்போனை, பழைய தொலைபேசியை மாற்றி சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். உங்கள் பழைய தொலைபேசியின் நிலை நன்றாக இருந்து, மாடலும் புதியதாக இருந்தால், நீங்கள் புதிய போனுக்கு கொடுக்கும் தொகையில் அதிகபட்ச பணத்தை குறைக்கலாம்.

OPPO F19 Pro+ 5G இன் விவரக்குறிப்புகள்

6.4 இன்ச் AMOLED பேனல் முழு எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. Oppo F19 Pro + 5G 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த போனில் 4,310mAh பேட்டரி உள்ளது. இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தொலைபேசியில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. மேலும், இந்த போனில் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

ALSO READ: Flipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News