அசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும்

ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2021, 11:50 AM IST
  • அமேசான் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க எந்த வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை.
  • அமேசான் செயலிக்குச் சென்று வினாடி வினாவில் பங்குகொள்ளுங்கள்.
  • இந்த விளையாட்டில் பங்கேற்க, நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
அசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும் title=

அமேசான் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க எந்த வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை. பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், அமேசான் அவ்வப்போது பல விளையாட்டுகள் மற்றும் வினாடி வினாக்களுக்கும் ஏற்பாடு செய்கிறது. இவற்றில் பங்கு கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பணம் கொடுத்து வாங்காமலேயே பெற முடியும்.

அத்தகைய ஒரு வினாடி வினாவான, OnePlus Smart TV Quiz  தற்போது அமேசானில் லைவாக உள்ளது. இதில், ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம். இதை எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.

அமேசான் வினாடி வினாவில் பங்குகொண்டு OnePlus Smart TV-ஐ வெல்லுங்கள்

அமேசானில் (Amazon)  இந்த வினாடி வினா அக்டோபர் 18 வரை லைவாக இருக்கும். நடைபெறும் மற்றும் வெற்றியாளர்களின் பட்டியல் நவம்பர் 4 அன்று வெளியிடப்படும். இந்த வினாடி வினாவில் மொத்தம் மூன்று வெற்றியாளர்கள் லக்கி டிரா மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அதிர்ஷ்ட டிராவில் பங்குகொள்ள, இந்த வினாடி வினாவில் உள்ள ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியாக பதிலளிக்க வேண்டும். இந்த வினாடி வினாவில் மூன்று பரிசுகள் அளிக்கப்படும். பரிசு பெற்றவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பரிசுகள் அளிக்கப்படும்.

வினாடி வினாவை இப்படி விளையாடி பரிசை அள்ளுங்கள்

இந்த வினாடி வினாவை விளையாட, நீங்கள் முதலில் அமேசான் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த வினாடி வினாவை அமேசான் இணையதளத்தில் விளையாட முடியாது. செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், அதில் லாக் இன் செய்யவும்.

உங்களிடம் கணக்கு இல்லையென்றால், உங்கள் விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். அமேசானின் முகப்புப் பக்கத்தில் ஒரு மெனு கொடுக்கப்பட்டிருக்கும். அதில், ‘Programs and Features'-ல் சென்று பின்னர் ‘fun zone' ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.

'உங்களுக்குத் தேவையான பொருட்களின் வினாடி வினா' (Quizes on Products you need) என்ற பிரிவில், ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (Smart TV) வினாடி வினாவுக்கான ஆப்ஷனைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்யவும். பின்னர் இந்த வினாடி வினாவை விளையாடி ஸ்மார்ட் டிவியை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும்.

ALSO READ: Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே

க்விஸ்ஸில் உள்ள கேள்விகள்

Q1. OnePlus TV U1S இல் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு பதிப்பு என்ன?

A1. ஆண்ட்ராய்டு 10

Q2. OnePlus TV 65U1S எத்தனை ஸ்பீக்கர்களுடன் வருகிறது?

A2.  நான்கு

 

Q3. இந்த அம்சம் OnePlus TV U1S உடன் நேரடியாக பேச உதவுகிறது. இந்த அம்சத்தின் பெயர் என்ன?
A3. ஸ்பீக்நவ் (டிஎம்) / SpeakNow (TM)

 

Q4. உங்கள் ஒன்பிளஸ் வாட்சை ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் உடன் இணைத்தவுடன் பின்வரும் செயல்பாடுகளில் எதை செய்ய முடியும்?
A4. மேலே உள்ள அனைத்தும்

 

Q5. OnePlus TV U1S இன் RAM மற்றும் ROM திறன் என்ன?
A5. 2GB RAM, 16GM ROM

முதலில், அமேசான் செயலிக்குச் சென்று இந்த வினாடி வினாவில் பங்குகொள்ளுங்கள். ஆனால் இந்த விளையாட்டில் பங்கேற்க, நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் உங்களிடம் சரியான அடையாள சான்று இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும். வெற்றியாளர்கள் அஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலமும் தெரிவிக்கப்படுவார்கள்.

ALSO READ: Amazon அதிரடி: வெறும் ரூ. 649-க்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், முந்துங்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News