Flipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை

இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டும் ஒரே நேரத்தில் போட்டிபோட்டு விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது கிடைக்கும் சில ஸ்மார்ட்போன் தள்ளுபடி டீல்களைப் பார்ப்போம்

Written by - ZEE Bureau | Last Updated : Sep 27, 2021, 09:22 PM IST
  • பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஒரே நேரத்தில் போட்டிபோட்டு விற்பனை செய்ய முடிவு.
  • கடன் அட்டை பயனர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி.
  • ரூ. 64,129 விலை கொண்ட ஐபோன் 12 வெறும் ரூ .49,999-க்கு கிடைக்கும்.
Flipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை

Best Deals on Smartphones: நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட் வரவிருக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை அக்டோபர் 3 முதல் தொடங்கி அக்டோபர் 10 வரை இருக்கும் என அறிவித்துள்ளது. முன்னதாக, பிக் பில்லியன் டேஸின் எட்டாவது பதிப்பு இந்த ஆண்டு அக்டோபர் 7-12 வரை நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது Big Billion Days 2021 தேதிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival sale) விற்பனையும் ஆரம்பமாகிறது. இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டும் ஒரே நேரத்தில் போட்டிபோட்டு விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கிறது.

பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ​​பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை (Axis Bank Credit Card) மற்றும் ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டை (ICICI Bank Credit Card) பயனர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை வழங்கும். பல ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது கிடைக்கும் சில ஸ்மார்ட்போன் தள்ளுபடி டீல்களைப் பார்ப்போம்

ஐபோன் 12:
ஐபோன் 12 (iPhone 12) ஸ்மார்ட்போன் ரூ. 64,129 விலையில் கிடைக்கிறது. ஆனால் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ .49,999 க்கு கிடைக்கும். ஐபோன் 13 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதால், ஐபோன் 12 மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் எனத் தெரிகிறது. கூடுதலாக, ஐபோன் 12 ப்ரோ வரிசையிலும் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விற்பனையை நிறுத்தியது. ஆனால் அவை பிளிப்கார்ட்டில் இன்னும் கிடைக்கின்றன.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ:
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ​​6 ஜிபி ரேம் கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ (Poco X3 Pro) ரூ .16,999 க்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாறிக்கொள்ளலாம் மற்றும் கூடுதல் சலுகைகளைப் பெற வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கலாம். பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ALSO READ | Flipkart big billion days 2021-ல் அதிரடி தள்ளுபடியில் iPhone 12 வாங்க சூப்பர் வாய்ப்பு

ஓப்போ ஏ 53 எஸ்:
தற்போது ஓப்போ ஏ 53 எஸ் (Oppo A53s 5G) போனின் விலை ரூ .15,990 ஆகும். பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ரூ .12,990 க்கு வாங்கலாம். ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் HD + டிஸ்ப்ளே, 6GB RAM, 128GB சேமிப்பு, 13-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் டிரிபிள் பின்புற கேமரா தொகுதி, 8-மெகாபிக்சல் முன் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 700 செயலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஓப்போ ரெனோ 6 மற்றும் ஓப்போ ரெனோ 6 ப்ரோ:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ ரெனோ 6 (Oppo Reno6) ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ .26,990 க்கு விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் ரூ 29,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல ஒப்போ ரெனோ 6 ப்ரோ (Oppo Reno6 Pro) நீங்கள் ரூ. 35,990 விலைக்கு வாங்கலாம். இது ரூ. 39,990 விலையிலிருந்து குறைந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்:
விற்பனையின் போது ஃப்ளிப்கார்ட் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge20 Fusion) போனை குறைந்த விலையில் ரூ .19,999 க்கு விற்பனை செய்யும். இந்த போனின் தற்போதைய விலை ரூ. 22,999. இதற்கு ரூ .3,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 800 யூ செயலி, 10-பிட் 90 ஹெர்ட்ஸ் அமோல்ட் திரை மற்றும் 108 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

ALSO READ | Flipkart Big Billion Days Sale: நம்ப முடியாத சலுகை, அசத்தல் தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ்

விவோ எக்ஸ் 60 5 ஜி:
ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது விவோ எக்ஸ் 60 5ஜி (Vivo X60 5G) பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. நீங்கள் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ரூ. 34,990 விற்பனை விலையில் வாங்கலாம். இந்த தொலைபேசியின் அதிகாரப்பூர்வ விலை இந்தியாவில் ரூ. 42,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசஸ் ROG தொலைபேசி 3:
ஆசஸ் ROG தொலைபேசி 3 (Asus ROG phone 3) சந்தையில் கிடைக்கும் சிறந்த கேமிங் போன்களில் ஒன்றாகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தற்போது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் ரூ. 46,999 க்கு கிடைக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ​​இந்த ஸ்மார்ட்போன் ரூ .34,999 விலையில் கிடைக்கும். அதாவது சுமார் ரூ .12,000 வரை தள்ளுபடி கிடைக்கும். 

ALSO READ | Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News