Honda Activa-வை தூக்கிச்சாப்பிடும் புதிய EV ஸ்கூட்டர்... பவர்ஃபுல் Ather Rizta - சிறப்புகள் என்ன?

Ather Rizta Electric Scooter: Ather நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டரான Rizta தற்போது தயாரிப்பில் இருந்து விற்பனைக்கு வந்துவிட்டது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 10, 2024, 05:52 PM IST
  • இது தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள Ather ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இன்று தயாரிப்பின் முதல் பேட்ச் விற்பனைக்கு வந்துள்ளது.
  • இது Honda Activa, TVS Jupiter போன்று பவரான ஸ்கூட்டராக இருக்கும்.
Honda Activa-வை தூக்கிச்சாப்பிடும் புதிய EV ஸ்கூட்டர்... பவர்ஃபுல் Ather Rizta - சிறப்புகள் என்ன? title=

Ather Rizta Electric Scooter: இந்தியாவில் பைக் மற்றும் கார் போன்ற வாகனங்கள் மீதான மோகம் என்பது கட்டுப்படுத்தவே இயலாது எனலாம். சாதாரண அன்றாட தேவைகளுக்கான வாகனங்கள் முதல் சாகசம், விளையாட்டு சார்ந்த விலை உயர்ந்த வாகனங்கள் வரை அனைத்தும் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மாதாமாதம் அதன் விற்பனையும் அதிகரித்து வருகின்றன எனலாம். 

அந்த வகையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் சார்ந்த வாகனங்களுக்கு இருக்கும் அதே மவுசு தற்போது எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களும் வாடிக்கையாளர்களுக்கு  மிகவும் நெருக்கமாகிவிட்டது. அதுவும் எலெக்ட்ரிக் வாகனங்களில் கார்களை விட ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பெரும்பான்மையானவர்கள் இன்றைய சூழலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விரும்புகின்றனர். விலை சற்றே உயர்வே என்றாலும் கூட, சார்ஜ் செய்யும் வசதிகள் குறைவு என்றாலும் கூட, சுற்றுச்சூழல் காரணங்கள் மற்றும் எளிமையான பயன்பாடு ஆகியவற்றால் மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புகின்றனர் எனலாம்.

விற்பனைக்கு வந்தது Ather Rizta

அந்த வகையில், இந்திய சந்தையில் பல வகையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. அதில் முன்னணியில் இருப்பது Ather நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் எனலாம். இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் Ather நிறுவனத்திற்கு தனி பெயரும் இருக்கிறது. இந்நிலையில், Ather நிறுவனத்தின் புதிய  Rizta மாடலின் முதல் தயாரிப்பு பேட்ச் தொழிற்சாலையில் இருந்து தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.  தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள Ather நிறுவனத்தின் ஆலையில் Rizta ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும்  படிக்க | எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!

Ather Rizta மாடலின் ஆரம்ப விலை ரூ.1.10 லட்சம் ஆகும். இதில் ஷாரூம் செலவுகள் அடங்கவில்லை. இந்த மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும், 7 வண்ணங்களிலும் விற்பனைக்கு வருகிறது. இது இன்று விற்பனைக்கு வந்ததை Ather நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான தருண் மேத்தா அவரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இன்று காலையில் தெரிவத்துள்ளார். இந்த பைக்கின் மீதும் Ather நிறுவனம் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளது. 

அனைவருக்குமான EV ஸ்கூட்டர்

குறிப்பாக, இந்த ஸ்கூட்டர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இயக்கும் வகையில் சொகுசாகவும், பல்வேறு வசதிகளுடனும் குறைந்த விலையிலும் சந்தைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. அதாவது குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மகன், மகள் என அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் இயக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. Ather Rizta குறித்து விரிவாக இங்கு காணலாம். 

பவர்ஃபுல் EV ஸ்கூட்டர்

Ather Rizta ஸ்கூட்டர் அந்த நிறுவனத்தின் முந்தைய மாடல்களான 450s, 450X, 450 Apex உள்ளிட்டவை போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டது, தோற்றத்திலும் வித்தியாசமாக இருக்கும். Honda Activa மற்றும் TVS Jupiter போன்ற வடிவமைப்பை இந்த Ather Rizta கொண்டுள்ளது. இதில் பலவகை பேட்டர் பேக் உள்ளது. அதற்கேற்றது போல் அதன் ரேஞ்ச் மாறுபடும். ரேஞ்ச் என்றால் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டு அதனை முழுமையாக பயன்படுத்தினால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதுதான் அந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் ஆகும். இதில் உங்களால் 2.9 kWh பேட்டரியை பொருத்த முடியும். இதன் ரேஞ்ச் 105 கி.மீ., ஆகும். அதேபோல் 3.7 kWh பேட்டரியையும் இதில் பொருத்தலாம். இதன் ரேஞ்ச் 125 கி.மீ., ஆகும். 

சிறப்பம்சங்கள் என்னென்ன?

இதில் அதிக பவரை தரும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு என்பது மணிக்கு 80 கி.மீ., ஆகும். மேலும், இந்த ஸ்கூட்டர் 0 - 40 kmph வேகத்தை வெறும் 3.7 நொடிகளிலேயே அடைந்துவிடும். அந்தளவிற்கு இதில் பவர் உள்ளது. மேலும், TFT தொடுதிரை டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலையும் ஸ்கூட்டருடன் இணைத்துக்கொள்ளலாம். ஒற்றை LED ஹெட்லேம்ப், LED டெயில்லைட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 இன்ச் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விடவும் இதில் நீண்ட சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை என்ன தெரியுமா?

முன்பே கூறியது போல் பெட்ரோல் மூலம் இயங்கும் Honda Activa மற்றும் TVS Jupiter போன்ற ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் TVS iQube மற்றும் Ola S1 Air போன்ற மாடல்களுக்கு Ather Rizta கடும் போட்டியலிக்கும். Ather Rizta சந்தையில் ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.46 லட்சம் வரை விற்பனை செய்யப்படலாம். இதில் ஷோரூம் செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதன் விலை சற்று மாறுப்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும்  படிக்க | மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News