ட்விட்டரில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கபட்ட வீடியோக்களுக்கு தானியங்கி தலைப்புகள் (Auto-Captions) தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்று முதல் (Dec 15) iOS, Android மற்றும் Web ஆகியவற்றிற்கு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. தானியங்கு தலைப்பு அம்சம் தற்போது 37 மொழிகளை கொண்டுள்ளது. வீடியோக்களை முதலில் பதிவேற்றும் சாதனத்தின் மொழியில் Auto-Captions காண்பிக்கப்படும். iOS மற்றும் Android இரண்டிலும் MUTE செய்யப்பட்ட வீடியோக்களில் Auto-Captions தோன்றும். டெஸ்க்டாப் பயனர்கள், Auto-Captions வசதியை ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம். செவித்திறன் குறைபாடு உள்ள பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் பெரிதும் உபயோகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய அப்டேட் குறித்து ட்விட்டர் நிறுவனம் இன்று அறிவித்தது. அதில் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணையத்தில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் வீடியோக்களுக்கான தானியங்கி வசன வரிகள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியது. புதிய அப்டேட்டின் மூலம், ட்விட்டர் பயனர்கள் மொபைலில் MUTE செய்யப்பட்ட வீடியோவைப் பார்க்கும்போது தலைப்புகள் தானாகவே தோன்றுவதைக் காணலாம். அரபு, சீனம், ஆங்கிலம், ஜெர்மன், ஹிந்தி, தமிழ் உட்பட 30க்கும் மேற்பட்ட மொழிகளில் Auto-Captions வசதி தற்போது உள்ளது.
Where are video captions when you need them? They’re here now automatically on videos uploaded starting today.
Android & iOS: auto-captions will show on muted Tweet videos; keep them on when unmuted via your device's accessibility settings
Web: use the "CC" button to turn on/off pic.twitter.com/IHJAI31IvX— Twitter Support (@TwitterSupport) December 14, 2021
இப்போது iOS மற்றும் Android-ல் MUTE வீடியோக்களில் தானியங்கு தலைப்புகள் காண்பிக்கப்படும் என்று Twitter குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் நம் சாதனத்தின் ஒலியை அணைத்த பிறகு தானியங்கு தலைப்பு உரையைப் பார்க்க டெஸ்க்டாப்பில் உள்ள CC என்ற பட்டன்ஐ அழுத்தினால் Auto-Captionsஐ பெறலாம். சமூக ஊடக வலைத்தளத்தில் முக்கிய பங்காற்றும் ட்விட்டர் நிறுவனம் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தது. ட்விட்டரில் பதிவிடும் பதிவுகளை எளிதாக இன்ஸ்டாகிராமில் ஷேர்செய்யும் புதிய வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மேலும், ட்விட்டர் புதிய தனியுரிமை தொடர்பான அம்சத்தைச் சேர்த்துள்ளது, இது பயனர்களைத் பிளாக் செய்யாமல் பின்தொடர்பவரை அகற்ற அனுமதிக்கிறது. ட்விட்டர் பயனர் ஒருவரை நீக்கியவுடன், பயனரின் ட்வீட்கள் இனி தானாக அவர்களின் டைம்லைனில் தோன்றாது. இது தற்போது இணைய பதிப்பில் கிடைக்கிறது.
ALSO READ | 1 ரூபாய்க்கு ஜியோ வழங்கும் ரீசார்ஜ் திட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR