அமேசானின் AWS மீண்டும் செயலிழந்தது; நெட்பிளிக்ஸ் உட்பட பல சேவைகளில் பாதிப்பு

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவையான அமேசான் வெப் சர்வீசஸ் சேவைகளில் பாதிப்பு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 07:54 AM IST
  • அமேசான் வெப் சேவைகளில் பாதிப்பு
  • அமேசனின் கிளவுட் சேவை AWS
  • நெட்பிளிக்ஸ் சேவையிலும் பாதிப்பு
அமேசானின் AWS மீண்டும் செயலிழந்தது; நெட்பிளிக்ஸ் உட்பட பல சேவைகளில் பாதிப்பு title=

புதுடெல்லி: அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவையான அமேசான் வெப் சர்வீசஸ் (Amazon Web Services) சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இரண்டு பிராந்தியங்களில் இணைய இணைப்புச் சிக்கல்களை எதிர்கொள்கிறது என்று அமேசன் தெரிவித்துள்ளது.  

Amazon.com Inc புதன்கிழமை (2021, டிசம்பர் 15) வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், தனது  கிளவுட் சேவையான Amazon Web Services, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இரண்டு பிராந்தியங்களில் இணைய இணைப்புச் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது..

பொது கிளவுட் சேவை வழங்குநரான AWS, Netflix உட்பட பல நிறுவனங்களின் ஆன்லைன் உள்கட்டமைப்புகளை ஆதரிக்கிறது என்பதால், இந்த சேவை இடர்பாடு, பல வாடிக்கையாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.

Amazon Connect என்பது Amazon Web Services (AWS) பொது கிளவுட் வாடிக்கையாளர் தொடர்பு மைய சேவையாகும். ... சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் AWS ஒரு தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வழங்குகிறது. சேவையை அணுக, பயனர்கள் Amazon Connect கணக்கு அல்லது AWS அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை (IAM) கணக்கு வைத்திருக்க வேண்டும்.

ALSO READ | கத்ரினா-விக்கி திருமண விழா ஒளிபரப்பு உரிமத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான்!

"US-West-1 மற்றும் US-West-2" பிராந்தியங்களில் உள்ள இணைய இணைப்புச் சிக்கல்களை ஆராய்ந்து வருவதாக அமேசான் தெரிவித்துள்ளது.  காட்டியது.

நெட்பிளிக்ஸ், ஸ்லேக், அமேசான் ரிங், டோர்டேஷ் (Netflix, Slack, Amazon's Ring, DoorDash) என பல சேவைகள் முடங்கியுள்ளதாக Downdetector.com தெரிவிக்கிறது.  இதைத்தவிர சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சேவைகளில் இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

டவுன்டெக்டர் தளமானது, தனது தளத்தில் பயனர் சமர்ப்பித்த பிழைகள் உட்பட, பல ஆதாரங்களில் இருந்து நிலை அறிக்கைகளைத் தொகுத்து செயலிழப்பைக் கண்காணிக்கிறது.அமேசானின் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்ச், அதன் சேவைகள் பல சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறியது.

AMAZON

ஸ்கேலர் அகாடமி
கடந்த வாரம் அமேசானின் கிளவுட் சேவைகளை ஒரு பெரிய செயலிழப்பு பல மணிநேரங்களுக்கு சீர்குலைந்தது, அதைத் தொடர்ந்து, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி +, ராபின்ஹூட் மற்றும் அமேசானின் இ-காமர்ஸ் வலைத்தளம் உட்பட பல சேவைகளை அணுக முடியவில்லை. 

கடந்த வாரம் கிழக்கு கடற்கரையில் அமேசானின் கிளவுட் சேவைகளை ஒரு பெரிய செயலிழப்பு பல மணிநேரம் சீர்குலைத்தது, இதன் விளைவாக நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+, ராபின்ஹூட் மற்றும் அமேசானின் இ-காமர்ஸ் இணையதளம் உட்பட பல சேவைகளை அணுக முடியவில்லை.

கடந்த 12 மாதங்களில் அமெரிக்காவில் 27 முறை அமேசான் இதுபோன்ற சேவை தடங்கல்களை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO | அமேசான் அதிரடி தீபாவளி சலுகைகள் 70% தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News