உங்களை உளவு பார்க்கும் 7 செயலிகள்! உடனே டெலிட் செய்யுங்கள்

ஸ்மார்ட்போனில் இருக்கும் இந்த 7 செயலிகள் உங்களை உளவு பார்க்கும் என்பதால் உடனே டெலிட் செய்துவிடுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2022, 12:30 PM IST
  • உளவு பார்க்கும் 7 செயலிகள்
  • ஆபத்தானவை என கண்டுபிடிப்பு
  • உடனே உங்கள் போனில் இருந்து டெலிட் செய்யுங்கள்
உங்களை உளவு பார்க்கும் 7 செயலிகள்! உடனே டெலிட் செய்யுங்கள் title=

டெக் உலகில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான செயலிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அவை அத்தனையும் பாதுகாப்பானவையா? என்ற கேள்வி உங்களுக்கு எழ வேண்டும். இல்லையென்றால் அந்த செயலிகளால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்தை நீங்கள் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும். 

சில செயலிகள் உங்களின் அன்றாட செயல்களை கண்காணிப்பதுடன், ஸ்மார்ட்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களையும் உளவு பார்க்கத் தொடங்குகின்றன. மேலும், செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது, அவை கேட்கும் அக்ஸஸ் (Access) கண்ணை மூடிக் கொண்டு கொடுத்துவிட்டால், உங்கள் ஒப்புதலுடனே உங்களின் அந்தரங்களை தகவல்களை எடுத்துக் கொண்டே இருக்கும். 

மேலும் படிக்க | WhatsApp: விரைவில் வருகிறது புதிய அம்சம், ஒரே நேரத்தில் 10 சாதனங்களை இணைக்கலாம்

இவை பெரும்பாலும் உங்களுக்கு தெரியாது. பொதுவெளியிலோ அல்லது தனிப்பட்ட முறையில் சைபர் கிரைம் கொள்ளையர்கள் உங்களை மிரட்டத் தொடங்கும்போதோ தான் தெரியவரும். அந்த நேரத்தில் நீங்கள் பதறுவதால் எந்த பயனும் விளையப்போவதில்லை. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நீங்கள், பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு செயலியைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இதுதான் உங்களுக்கு பாதுகாப்பு.

அந்தவகையில், லேட்டஸ்டாக கண்டுபிடிக்கப்பட்ட செயலிகளில் சில அத்தகைய தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான புகார் மற்றும் டெக் வல்லுநர்களின் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த செயலிகள் ஆபத்தானவை என்ற லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளன. தனிநபர் தகவல் திருட்டு மற்றும் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 செயலிகள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

1. டெய்லி பின்டன்ஸ் (Daily Fitness OL)

2. என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)

3. பனோரமா கேமரா (Panorama Camera)

4. போட்டோ கேமிங் பஸில் (Photo Gaming Puzzle)

5. ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)

6. பிஸ்னஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)

7. கிரிப்டோமைனிங் ஃபார்ம் (Cryptomining Farm Your Own Coin)

இந்த 7 செயலிகளும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு, யூசர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்த எச்சரிக்கை தெரியாமல் நீங்கள் இந்த செயலிகளை பயன்படுத்திக் கொண்டே இருந்தால், உடனே டெலிட் செய்துவிடுங்கள். 

மேலும் படிக்க | பழசுக்கு புதுசு..! ஜியோவின் ஸ்மார்ட்போன் சூப்பர் ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News