Blaupunkt TV: 32-75 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்... பிளிப்கார்ட்டில் சூப்பர் சலுகைகள்

Blaupunkt TV: ஜூன் 9 முதல் ஜூன் 14 வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில், பிளாக்பங்க்ட்டின் புதிய ஸ்மார்ட் டிவி -யை வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2023, 11:54 AM IST
  • Blaupunkt நிறுவனம் சக்திவாய்ந்த ஆடியோ அனுபவத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இவற்றில் அட்வான்ஸ் ஸ்பீக்கர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • 32, 40 மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளமைக்கப்பட்ட நெட்ஃபிக்ஸ் மற்றும் 2 48W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.
Blaupunkt TV: 32-75 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்... பிளிப்கார்ட்டில் சூப்பர் சலுகைகள் title=

ஸ்மார்ட் டிவி சலுகைகள்: பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Blaupunkt ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 32 இன்ச் எச்டி, 43 இன்ச் மற்றும் 40 இன்ச் எஃப்எச்டி, 65 மற்றும் 50 இன்ச் 4கே ஜிடிவி மற்றும் 75 க்யூஎல்இடி ஜிடிவி ஆகியவை அடங்கும். நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து விற்பனை செய்யப்படும். ஜெர்மன் பிராண்டின் புதிய வகை டிவிகள் ரூ. 6,499 முதல் தொடங்கும். 

ஜூன் 9 முதல் ஜூன் 14 வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில், பிளாக்பங்க்ட்டின் புதிய ஸ்மார்ட் டிவி -யை வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.

Blaupunkt இன் புதிய தொலைக்காட்சிகள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த நிலை உயர் செயல்திறனை (நெக்ஸ்ட் லெவல் ஹை பர்ஃபார்மன்ஸ்) அளிக்கின்றன. இந்த டிவி -களில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை, சிறந்த ஒலி அமைப்பு மற்றும் சிறந்த பார்வை அனுபவம் (வியூ எக்ஸ்பீரியன்ஸ்) ஆகியவை கிடைக்கும். பிளிப்கார்ட்டின் விற்பனையில் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவியில் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும்.

நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட் டிவியில் சைபர்சவுண்ட் ஜெனரேஷன் 2 டிவிகளும் உள்ளன. இது தவிர, நிறுவனம் 32 இன்ச் முதல் 75 இன்ச் வரையிலான அளவிலான டிவிகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | ரூ.10,000 -ஐ விட குறைந்த விலையில் அசத்தலான Smart LED TV: பிளிப்கார்ட் அதிரடி

Blaupunkt 32/40/43 இன்ச்: புதிய ஸ்மார்ட் டிவியின் விலை

Blaupunkt நிறுவனம் சக்திவாய்ந்த ஆடியோ அனுபவத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் அட்வான்ஸ் ஸ்பீக்கர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 32, 40 மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளமைக்கப்பட்ட நெட்ஃபிக்ஸ் மற்றும் 2 48W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கும். இந்த டிவிகள் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரோம் பொருத்தப்பட்டு சிறந்த செயல்திறனை வழங்குகின்றன. அவற்றின் விலை விவரங்களை கீழே காணலாம்.

- Blaupunkt 32 இன்ச் HD (32CSG7111): ரூ 10,888

- Blaupunkt 40 இன்ச் FHD (40CSG7112): ரூ 16,499

- Blaupunkt 43 இன்ச் FHD (43CSG7105): ரூ 18,499

Blaupunkt 50/65 இன்ச் டிவி: கூகுள் டிவி

பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 50 மற்றும் 65 இன்ச் டிவி -கள் ஏற்றதாக இருக்கும். 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரோம் கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளையும் Blaupunkt அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயலாக்க சக்தி மற்றும் சேமிப்பு திறன் ஆகியவை இந்த டிவி -களை நல்ல தேர்வாக ஆக்குகின்றன. புதிய டிவியில் MT9062 செயலி, 2 60W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கும். இதன் விலை விவரங்களை இங்கே காணலாம்.

- Blaupunkt 50 இன்ச் 4K (GTV) (50CSGT7022): ரூ 28,999

- Blaupunkt 65 இன்ச் 4K (GTV) (65CSGT7024): ரூ 44,444

Blaupunkt 75 இன்ச் டிவி: அசத்தலான ஃபிளாக்ஷிப் டிவி

இன்னும் அற்புதமான அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள், 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க முயற்சி செய்யலாம். க்யூஎல்இடி 4கே உடன், இதில் 1.1 பில்லியன் வண்ணங்கள், 4 இன்-பில்ட் ஸ்பீக்கர்கள், 60-வாட் டால்பி ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள், HDR 10+, DTS TruSurround சவுண்ட் போன்ற அம்சங்கள் கிடைக்கும். பெசல்லெஸ் டிஸ்ப்ளே மற்றும் ஸ்லிம் டிவி அதாவது Blaupunkt 75 இன்ச் QLED (75QD7040) விலை ரூ.99,999 ஆகும்.

மேலும் படிக்க | உங்கள் போனில் அடிக்கடி இப்படி வருகிறதா? இதோ உடனடி தீர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News