ரூ 666 ரீசார்ஜ் பிளான்..ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது சிறந்த திட்டத்தை அளித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ரூபாய் 666க்கு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் நன்மைகள் நீங்கள் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 1, 2023, 03:31 PM IST
  • BSNL ரூ.666 ரீசார்ஜ் திட்டம்.
  • 105 நாள்கள் இந்த திட்டம் செல்லுப்படியாகும்.
  • 2ஜிபி டேட்டா வரம்பு கிடைக்கிறது.
ரூ 666 ரீசார்ஜ் பிளான்..ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல் title=

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மக்களிற்குத் தேவையான ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகின்றது. அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.666 திட்டத்தை பற்றி இன்று நாம் காண உள்ளோம். இதன் வேலிடிட்டி காலம் 105 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 666 ஆக இருக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வரம்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் பயனர்களுக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்கள் PRBT வழங்கப்படுகிறது. இலவச ஜிங் மியூசிக் அணுகலும் கிடைக்கிறது.

மேலும் படிக்க | 2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா

எப்படி ரீசார்ஜ் செய்வது
பிஎஸ்என்எல் இன் இந்த ரூ 666 திட்டத்தை நீங்கள் https://www.bsnl.co.in/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

இதற்கிடையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட போட்டிப்போட்டுக் கொண்டு BSNL குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க | Cheapest Smartphone: வெறும் ரூ.6,499-க்கு கிடைக்கும் அட்டகாசமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News