Free Disney+Hotstar Recharge Plans: தற்போதைய காலகட்டத்தில் ஓடிடி பயன்பாடு என்பது வெகுமக்களிடமே அதிகரித்துவிட்டது. இலவச பயன்பாடோ அல்லது சந்தாகட்டியோ ஓடிடியை பார்ப்பது பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹார்ட்ஸ்டார், Zee5, SonyLiv போன்ற ஓடிடி தளங்கள் பொதுவாக பலராலும் பயன்படுத்தப்படுகிறது. வெப்சீரிஸ், திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் போன்ற பலவற்றை இதில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
அந்த வகையில் தற்போதைய சீசன் என்றால் அது டிஸ்னி+ஹாட்ஸடார் எனலாம். ஏனென்றால் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையை நேரடியாக ஒளிபரப்பும் ஸ்டார் நெட்வோர்க், டிஸ்னி+ஹாட்ஸ்டாரில்தான் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. எனவே, கோடிக்கணக்கானோர் உலகக் கோப்பை போட்டியை இலவசமாகவே தற்போது கண்டுகளித்து வருகின்றனர். இதில், உலகக் கோப்பை மட்டுமின்றி புதிய திரைப்படங்கள், வெப்சீரிஸ் போன்றவற்றையும் மக்கள் காணுகின்றனர்.
ஆனால், உலகக் கோப்பையை மட்டுமே இலவசமாக காணமுடியும். மற்ற சில படங்களுக்கு நீங்கள் சந்தா கட்டியாக வேண்டும். எனவேதான் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் பிளான்களுடன் இலவச ஓடிடி சந்தாவையும் அளிக்கின்றனர். அதுவும் வெறும் குறைந்த விலையிலான ரீசார்ஜ் பிளானில், ஒரு வருடத்திற்கு இலவச ஓடிடி கொடுக்கும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தைதான் இங்கு காண உள்ளோம்.
மேலும் படிக்க | 365 நாளும் 2GB டேட்டா... மாதம் 126 ரூபாய் தான்... ஜாக்பாட் ரீசார்ஜ் திட்டம் இதுதான்!
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இது 28 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், இந்த திட்டத்தில், 1 வருடத்திற்கு அதாவது 365 நாட்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவச சந்தாவை பெறலாம். இது மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பெறுவார்கள்.
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் 598 ரூபாயாகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா பலனை தரும். மொத்தம் 56 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். உங்கள் தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்தாலும், 64Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தொடரலாம்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம்
இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 1 வருடத்திற்கு இலவச Disney + Hotstar மொபைல் சந்தாவைப் பெறுகிறார்கள். இதனுடன், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச அனுமதியும் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் வாடிக்கையாளர்கள் ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டாவுக்குத் தகுதியுடையவர்கள், ஆனால் உங்கள் பகுதியில் ஜியோவின் 5ஜி கவரேஜ் கிடைத்து, உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க | ஜியோவின் ஜாக்பாட் விற்பனை... வெறும் ரூ.2,600 விலையில் 4ஜி மொபைல் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ