iphone 13-ல் ரூ. 36,000-க்கும் அதிகமான தள்ளுபடி: க்ரோமாவின் அசத்தும் டீல்

iPhone 13 ஐ வாங்க எண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல செய்தி. அதிரடி தள்ளுபடியில் ஐ போன் 13-ஐ வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2022, 01:20 PM IST
  • iPhone 13 இல் 36 ஆயிரத்துக்கும் அதிகமான தள்ளுபடியைப் பெறுங்கள்.
  • குரோமா சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது.
  • பரிமாற்ற சலுகையும் இதில் அடங்கும்.
iphone 13-ல் ரூ. 36,000-க்கும் அதிகமான தள்ளுபடி: க்ரோமாவின் அசத்தும் டீல் title=

பெரும்பாலான மக்கள் ஆப்பிள் ஐபோன்களை வாங்க ஆசைப்பட்டாலும், அவை பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக இருப்பதாலும், அவற்றின் விலை மிக அதிகமாக இருப்பதாலும் அவற்றை பலரால் வாங்க முடிவதில்லை.

ஆப்பிளின் சமீபத்திய ஐபோன், ஐபோன் 13 பொதுவாக மிகவும் விலை அதிகமான போனாகும். எனினும், இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் மூலம் இந்த ஐபோனை மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும். எலக்ட்ரானிக் ஸ்டோர் க்ரோமா ஐபோன் 13 இல் மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் அதை ரூ.36 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடியில் வாங்கலாம்.

குரோமாவிலிருந்து ஐபோன் 13- ஐ வாங்கினால் அதிரடி சலுகை 

இந்த ஐபோன் 13-ஐ ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானுக்குப் பதிலாக குரோமாவிலிருந்து வாங்கினால், சிறந்த சலுகைகளைப் பெறலாம். ஐபோன் 13 (128ஜிபி)-ன் சந்தை விலை ரூ.79,900 ஆகும். எனினும்,  குரோமாவில் ரூ.5,910 தள்ளுபடிக்குப் பிறகு இந்த போன் ரூ.73,990க்கு விற்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், வாடிக்கையாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், ரூ.11,910 மொத்த தள்ளுபடிக்குப் பிறகு, ஐபோன்13 ஐ ரூ.67,990-க்கு வாங்க முடியும்.

மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ 

பம்பர் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

க்ரோமாவின் இந்த ஆஃபரில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட்போனுக்கும் ஈடாக இந்த ஐபோன் 13-ஐ வாங்கலாம். இந்த சலுகையில் சுமார் ஒரு வருடம் பழமையான ஐபோன் 12 (128ஜிபி) ஐ வழங்கினால், 24,500 ரூபாய் பம்பர் தள்ளுபடியைப் பெறலாம். இந்த வழியில், ஐபோன் 13-ஐ ரூ.67,990-க்கு பதிலாக ரூ.43,490-க்கு வாங்கலாம். போனுக்கான தள்ளுபடிகள், வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் ஆகியவற்றை இணைத்து மொத்தம் இந்த போனில் ரூ.36,410 தள்ளுபடியைப் பெறலாம்.

ஐபோன் 13 இன் அம்சங்கள்

இந்த டீலில் ஐபோன் 13-இன் 128ஜிபி மாறுபாடு பற்றி பேசப்பட்டுள்ளது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கேமரா அமைப்புடன் வருகிறது. 

இதில் 12எம்பி அல்ட்ரா-வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள், நைட் மோட் மற்றும் ஸ்மார்ட் எச்டிஆர் 4 போன்ற பல புகைப்பட முறைகளையும் வாடிக்கையாளர்கள் காணலாம். இந்த போனின் முன்பக்க கேமராவும் 12எம்பி கொண்டது.

குரோமாவின் இந்தச் சலுகை ஐபோன் 13-ன் மற்ற சேமிப்பக வகைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வாடிக்கையாளர்கள் உடனடியாக இதை பயன்படுத்திக்கொண்டால், லாபம் காணலாம். 

மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News