Car Discounts: அசத்தல் கார்களில் அபார தள்ளுபடிகள், மிஸ் செஞ்சா வருத்தப்படுவீங்க

அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் நடப்பு ஆண்டின் கடைசி மாதத்தில் தங்கள் வாகனங்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்கியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 02:21 PM IST
  • அனைத்து நிறுவனங்களுமே தங்கள் கார்களின் விலையை அதிகரிக்கவுள்ளன.
  • நிசான் கிக்ஸ் காரில் மொத்தம் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காருக்கு ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.
Car Discounts: அசத்தல் கார்களில் அபார தள்ளுபடிகள், மிஸ் செஞ்சா வருத்தப்படுவீங்க title=

புதுடெல்லி: இந்திய ஆட்டோமொபைல் துறையின் அனைத்து முக்கிய வாகன உற்பத்தியாளர்களும் புதிய ஆண்டை விலை ஏற்றத்துடன் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். மாருதி சுஸுகி முதல் டாடா வரையிலும், டொயோட்டா முதல் மெர்சிடிஸ் வரை, அனைத்து நிறுவனங்களுமே தங்கள் கார்களின் விலையை அதிகரிக்கவுள்ளன. 

அதே நேரத்தில், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் நடப்பு ஆண்டின் கடைசி மாதத்தில் தங்கள் வாகனங்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்கியுள்ளன. பெரும் தள்ளுபடி விலையில், இந்த வாகனங்களை வாங்க இன்றே கடைசி வாய்ப்பு. 

ஆண்டின் கடைசி நாளான இன்று, புத்தாண்டில் நிறுவனங்கள் தங்களது கார்களின் (Cars) விலையை உயர்த்தவுள்ளன. ஆகையால், இந்த மாதம் எந்த நிறுவனம் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி அளித்துள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

எந்த நிறுவனம் எவ்வளவு தள்ளுபடி கொடுத்தது

மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் - மாருதி (Maruti) நிறுவனம் இந்த காருக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் 2021 - நிறுவனம் இந்த காருக்கு ரூ.40,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் 2020 - ட்ரைபரின் பழைய மாடலில் ரூ.60,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் - நிறுவனம் காம்பாக்ட் எஸ்யூவியில் ரூ.15,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது.

ALSO READ | BMW iX SUV முதல் எலக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் 1.15 கோடி ரூபாய்! விவரம் இங்கே...

ஆண்டின் கடைசி மாதத்தில் பம்பர் தள்ளுபடி

ஹூண்டாய் ஆரா - ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்த காருக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி கிடைத்துள்ளது.

ஹோண்டா சிட்டி - நிறுவனம் இந்த காருக்கு மொத்தம் ரூ.35,500 வரையிலான சலுகைகளை வழங்கியுள்ளது.

கிராண்ட் ஐ10 நியாஸ் - இந்த காருக்கு மொத்தம் ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஆல்டோ - வாடிக்கையாளர்களின் விருப்பமான இந்த கார் ரூ.48,000 வரை மொத்த பலன்களைப் பெறுகிறது.

புத்தாண்டில் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தும்

டாடா நெக்சான் இ.வி- இந்த மின்சார எஸ்யூவிக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

மஹிந்திரா KUV100 - இந்த கார் மொத்தம் ரூ.61,055 தள்ளுபடியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் i20 - நிறுவனம் இந்த பிரபலமான காரில் ரூ.40,000 வரை மொத்த நன்மைகளை வழங்கியுள்ளது.

ரினால்ட் க்விட் - இந்த சிறிய அளவிலான காரில் மொத்தம் ரூ.35,000 வரை சலுகைகள் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் - நிறுவனம் இந்த காரில் மொத்தம் ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

டொயோடா கிளான்சா - இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ரூ.22,000 வரையிலான நன்மைகளுடன் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி - இந்த இரண்டு எஸ்யூவிகளிலும் மொத்தம் ரூ.65,000 வரையிலான பலனை நிறுவனம் வழங்குகிறது.

ரெனால்ட் டஸ்டர் - இந்த பிரபலமான காருக்கு ரூ.1.30 லட்சம் வரை பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது.

நிசான் கிக்ஸ் - இந்த காரில் மொத்தம் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 - இந்த எஸ்யூவியில் மொத்தம் ரூ.69,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி பலீனோ - நிறுவனம் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கில் ரூ.33,000 வரை மொத்த நன்மைகளை வழங்கியுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் - நிறுவனம் இந்த காருக்கு ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

ALSO READ | Bumper Year End Offer: இந்த கார்களுக்கு ரூ. 1.30 லட்சம் வரையிலான தள்ளுபடிகள், hurry!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News