Flipkart Big Saving Days 2023: அட நிஜம்தான், நம்புங்க!! ரூ.60,000 ஐபோனின் விலை வெறும் ரூ. 18,000

Flipkart Big Saving Days 2023: பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விற்பனையில் ரூ.60,000 மதிப்புள்ள ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 19, 2023, 01:27 PM IST
  • பரிமாற்ற சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
  • இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டால் போனின் விலை ரூ.17,999 ஆக குறைந்துவிடும்.
  • இது ஐபோன் பிரியர்களுக்கு மிக நல்ல டீலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Flipkart Big Saving Days 2023: அட நிஜம்தான், நம்புங்க!! ரூ.60,000 ஐபோனின் விலை வெறும் ரூ. 18,000 title=

Flipkart Big Saving Days 2023: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 15 அன்று தொடங்கப்பட்டது. பிளிப்கார்ட்டின் இந்த சேல் ஜனவரி 20 வரை இயங்கும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில் தற்போது ஐபோன் விற்பனை டிரெண்டில் உள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விற்பனையில் ரூ.60,000 மதிப்புள்ள ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும். எந்த ஐபோன் மலிவாக கிடைக்கிறது, இதை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 

Flipkart Big Saving Days: iPhone 12 mini சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஐபோன் 12 மினியின் அறிமுக விலை ரூ.59,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இது ரூ.38,999க்கு கிடைக்கிறது. அதாவது போனில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறப்படுகிறது. இதற்குப் பிறகு, பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக ஐபோனின் விலை கணிசமாக குறைகின்றது. 

Flipkart Big Saving Days: iPhone 12 mini வங்கி சலுகைகள்

ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஐபோன் 12 மினி வாங்கினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.37,999 ஆக குறையும். 

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்க போறிங்களா? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!

Flipkart Big Saving Days: iPhone 12 mini பரிமாற்ற சலுகை

ஐபோன் 12 மினியில் 20 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அதாவது பரிமாற்ற சலுகை கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், இந்த பரிமாற்ற சலுகையை பயன்படுத்திகொள்ள தங்கள் பழைய போனின் நிலை நன்றாக இருப்பதையும், போன் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த தள்ளுபடியை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

பரிமாற்ற சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டால் போனின் விலை ரூ.17,999 ஆக குறைந்துவிடும். இது ஐபோன் பிரியர்களுக்கு மிக நல்ல டீலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

மேலும் படிக்க | Fake ChatGPT: இந்த செயலிகள் போலியானவை.. பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News