OnePlus தீபாவளி சேலில் எக்கச்சக்க தள்ளுபடி: மிகக்குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Flipkart, Amazon மற்றும் Xiaomi போலவே, இப்போது OnePlus-லும் தீபாவளி விற்பனை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 12:58 PM IST
  • இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.
  • ஒன்பிளஸ் தயாரிப்புகளில் பம்பர் தள்ளுபடிகள்.
  • OnePlus 9R மற்றும் OnePlus 9-ல் ரூ. 3000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.
OnePlus தீபாவளி சேலில் எக்கச்சக்க தள்ளுபடி: மிகக்குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு title=

Good News for OnePlus: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. பண்டிகை கால சிறப்பு சலுகையில், கிட்டத்தட்ட அனைத்து மின்னணு நிறுவனங்களும் பிராண்டுகளும் தங்கள் தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்குகின்றன.

Flipkart, Amazon மற்றும் Xiaomi போலவே, இப்போது OnePlus-லும் தீபாவளி விற்பனை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை லைவ் ஆகிவிட்டது. இந்த சேலில், OnePlus 9 உட்பட பல தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது.

OnePlus: தீபாவளி விற்பனை

இந்த சிறப்பு தீபாவளி விற்பனையில், ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் சலுகைகள் கிடைக்கின்றன. ஒன்பிளஸ் தயாரிப்புகளில் பம்பர் தள்ளுபடிகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் பல வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த சேல், அக்டோபர் 4, அதாவது இன்று முதல் OnePlus.in-ல் லைவ் ஆகியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கார்டைப் (SBI Card) பயன்படுத்தி ரூ .7000 வரை கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.

OnePlus-ன் வலைத்தளத்தைத் தவிர, நீங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை அமேசான் பிரைம் சேலிலிருந்தும் வாங்கலாம். அமேசான் (Amazon) சேலில் பொருட்களை வாங்கினால், HDFC கார்ட் கொண்டு வாங்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7000 பம்பர் தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ: Flipkart Big Billion Days சலுகை மழை: ரூ.34,000 தள்ளுபடியில் லேப்டாப், இன்னும் பல offers 

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடிகள்

தீபாவளி விற்பனையில், OnePlus 9 Series-ல் ரூ .4000 வரை தள்ளுபடி கிடைக்கும். சேலில் OnePlus 9 Pro போனை ரூ. 4000 மலிவாக வாங்கலாம். சேலில் இதன் விலை 60,999 ரூபாய் ஆகும்.

இது தவிர, OnePlus 9R மற்றும் OnePlus 9-ல் ரூ. 3000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இந்த சேலில், OnePlus 9R-ஐ 36,999 ரூபாய்க்கும் OnePlus 9-ஐ 46,999 ரூபாய்க்கும் வாங்கலாம்.

இது தவிர, OnePlus Nord 2-இல் தள்ளுபடி இருக்காது. ஆனால் இந்த போனில் 2000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையை கண்டிப்பாக பெற முடியும். OnePlus Nord CE 5G-ல் 1000 ரூபாய் தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது.

நுகர்வோர் மின்னணு சந்தையில் மிகப்பெரிய ஏற்றத்திற்கான எதிர்பார்ப்பு: 75 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் வர்த்தகம்

OnePlus Smart TV-களுக்கும் தள்ளுபடி

நிறுவனம் தனது Y-Series மற்றும் U-Series ஸ்மார்ட் டிவிகளில் 15 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் OnePlus TV Y-Series-ன் 32 இன்ச் மாடலை ரூ .15,999 க்கு வாங்கலாம். இது தவிர, உங்களிடம் ஐசிஐசிஐ (ICICI) டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருந்தால், ரூ .2000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

இது தவிர, OnePlus TV U-Series-ன் 50 இன்ச் மாடலின் விலை 43,999 ரூபாயாகும். ஐசிஐசிஐயின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால், இதில் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ .3000 தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ: Amazon Great Indian Festival Sale 2021: iPhone 12 Pro இல் பிரம்மாண்ட தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News