Flipkart Sale: நம்ப முடியாத விலையில் ஸ்மார்ட் டிவி விற்பனை, முந்துங்கள்

Flipkart TV Days:பிளிப்கார்டில் மீண்டும் ஒரு சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 12:04 PM IST
  • பிளிப்கார்டில் டிவி டேஸ் சேல் (Flipkart TV Days Sale) நடந்து வருகிறது.
  • விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம்.
  • வங்கி மற்றும் பரிமாற்ற சலுகையும் இதில் உள்ளது.

Trending Photos

Flipkart Sale: நம்ப முடியாத விலையில் ஸ்மார்ட் டிவி விற்பனை, முந்துங்கள் title=

Flipkart TV Days: பிளிப்கார்டில் டிவி டேஸ் சேல் (Flipkart TV Days Sale) நடந்து வருகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். 

50 இன்ச் ஸ்மார்ட் டிவியை (Smart TV) மிக மலிவாக வாங்க ஒரு நல்ல வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது. நீங்களும் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி-ஐ வாங்கும் திட்டத்தில் இருந்து உங்கள் பட்ஜெட்டும் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தாம்சனின் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி-ஐ (Thomson 9R PRO 50 inch 4K LED Smart Android TV) மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இதில் கிடைக்கும் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பெற்றால், 50 இன்ச் டிவியை வெறும் ரூ.16,499க்கு பெறலாம்.

Thomson 9R PRO 50 இன்ச் 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

Thomson 9R PRO 50 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.42,999 ஆகும். எனினும், இந்த பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் இந்த டிவி ரூ.29,999க்கு கிடைக்கிறது. அதாவது, இந்த டிவியில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, வங்கி மற்றும் பரிமாற்ற சலுகையும் இதில் உள்ளது. இதன் காரணமாக டிவியின் விலை கணிசமாகக் குறையும்.

ALSO READ | Flipkart TV Days: வெறும் 24 ஆயிரம் ரூபாய்க்கு 55 இன்ச் Smart TV

தாம்சன் 9ஆர் ப்ரோ 50 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: வங்கி சலுகைகள் 

டிவி வாங்க வங்கி அட்டையைப் பயன்படுத்தினால், ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, கோடக் பேங்கின் கார்டைப் பயன்படுத்தினால், 1500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, டிவியின் விலை ரூ.27,499 ஆகக் குறையும். இது தவிர, இந்த டிவியில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் காரணமாக டிவியின் விலை மேலும் குறையும்.

Thomson 9R PRO 50 இன்ச் 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: எக்ஸ்சேஞ்ச் சலுகை

தாம்சன் 9ஆர் ப்ரோ 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை, அதாவது பரிமாற்ற சலுகை உள்ளது. பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம். எனினும், இந்த சலுகையைப் பெற, பழைய டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தால் மட்டுமே எக்ஸ்சேஞ்ச் சலுகையில் (Exchange Offer) 11 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் அனைத்து சலுகைகளையும் முழுமையாக பெற முடிந்தால், இந்த ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ.16,499-க்கு வாங்கலாம். 

ALSO READ | Amazon மற்றும் Flipkart-ல் ஐபோன் 12க்கு அதிரடி ஆபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News