மலிவான மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க செம்ம வாய்ப்பு; ஆரம்ப விலை 28,000 மட்டுமே

பெட்ரோல் விலையில் இருந்து விடுபட, இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உங்கள் பட்ஜெட்டிலும் எளிதில் பொருந்தும், ஏனெனில் இந்த பட்டியலில் இந்தியாவின் மலிவான EVகள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 04:43 PM IST
  • இந்தியாவில் மலிவான மின்சார வாகனம்
  • குறைந்த விலையில் முழு பைசா வசூல்
  • மலிவான EV ரூ 28,000 ஆகும்
மலிவான மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க செம்ம வாய்ப்பு; ஆரம்ப விலை 28,000 மட்டுமே title=

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்களின் இருசக்கர வாகன பராமரிப்பு செலவு அதிகரித்து, தற்போது மக்களின் பட்ஜெட்டில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களை வாங்க விரும்பலாம், ஆனால் தற்போது அதன் விளையும் சற்று உயர்ந்து உள்ளன. இருப்பினும், சில குறைவான விலை கொண்ட விருப்பங்கள் உள்ளன, அவற்றின் அம்சங்களைப் பற்றி அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை ஓட்ட முடியும்
நீங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooters) வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு இந்த செய்தி பயன் தரும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை ஓட்டக்கூடிய மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Scooter) பற்றி இங்கு காண உள்ளோம். செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் ஊடக இணையதளத்தின்படி உள்ளன, இந்த விலைகள் மாநிலம், இருப்பிடம் மற்றும் டீலர்ஷிப் ஆகியவற்றைப் பொறுத்து மாறலாம். எனவே இந்தியாவில் மலிவான மின்சார இரு சக்கர வாகனங்கள் (Two Wheelers) பற்றி மேலும் படிக்கவும்.

ALSO READ | Bike Maintenance: குளிர் காலத்தில் பைக் ஓட்ட உதவும் சில முக்கிய குறிப்புகள்

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா
ஹீரோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆப்டிமா ரூ.55,580 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Hero Optima HX ஆனது 1200W மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 51.2W/30Ah போர்ட்டபிள் பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஸ்கூட்டரை 82 கிமீ வரை ஓட்ட முடியும் மற்றும் அதன் பேட்டரியை சார்ஜ் செய்ய மொத்தம் 5 மணி நேரம் ஆகும். ஹீரோ ஆப்டிமா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 42 கிமீ ஆகும்.

ஆம்பியர் V48
மலிவான ஸ்கூட்டரில் ஒன்று ஆம்பியர் ஆகும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.37,390 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்பியர் EV ஆனது 48V, 20Ah பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை செல்லும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 8-10 மணி நேரம் ஆகும்.

உஜாஸ் eGo
Ujas EGO எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லியில் ரூ.34,880 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது 250W மோட்டாருடன் 48V-26Ah பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6-7 மணி நேரம் ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை ஓட்ட முடியும். ஸ்கூட்டர் மிகவும் நவீனமானது, இது டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஆண்டி-தெஃப்ட் அலாரம், முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொண்ட அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அவோன் இ லைட்
Avon E Lite இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.28,000 ஆகும். இது ஒரு இலகுரக ஸ்கூட்டர் ஆகும், இதில் நிறுவனம் 48V 12Ah திறன் கொண்ட பேட்டரியை நிறுவியுள்ளது. இந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 5-6 மணி நேரம் ஆகும் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த பேட்டரி 50-60 கி.மீ வரை செல்லும். இந்த மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 24 கிமீ ஆகும்.

ALSO READ | புத்தாண்டில் மற்றொரு ஷாக்: Bajaj Auto பைக்குகளின் விலை உயர்கிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News