Jio-Airtel-Vi இன் மிகவும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்! இதோ முழு details

இன்று நாம் நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel, Vodafone Idea ஆகியவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 04:16 PM IST
Jio-Airtel-Vi இன் மிகவும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்! இதோ முழு details title=

புதுடெல்லி: நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் வோடபோன் ஐடியா அல்லது விஐ  (Vodafone Idea or Vi) ஆகியவை சமீபத்தில் தங்களின் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியுள்ளன. விலை உயர்வுக்குப் பிறகு, இந்நிறுவனங்களின் சில திட்டங்களின் பலன்களில் சில வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் இந்த மூன்று நிறுவனங்களின் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம், அதன் விலை ரூ 250 க்கும் குறைவாக உள்ளது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ப்ரீபெய்ட் திட்டங்கள்
இன்று நாம் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பேச உள்ளோம். அதன் விலை ரூ 250 க்கும் குறைவாக உள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களின் திட்டங்களிலும் தினசரி டேட்டா மற்றும் குரல் அழைப்பு பலன்களை ரூ.250க்கு குறைவாகப் பெறுவீர்கள் என்றாலும், சில கூடுதல் நன்மைகளில் வித்தியாசம் காணப்படுகிறது. எந்த நிறுவனம் அதன் திட்டத்தில் என்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை இங்கே காண்போம்.

ALSO READ | Jio vs Airtel vs Vi: உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் ரீசார்ஜ் திட்டம் எது?

ரூ. 250க்கு கீழே Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோவில் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இதில் 20 நாட்களுக்கு தினமும் 1ஜிபி இணையம், எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் ரூ.179 செலுத்தினால், 24 நாட்களுக்கு அதே பலன்களைப் பெறுவீர்கள். 209 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு இந்த நன்மைகளைப் பெறுவீர்கள். இது தவிர, ஜியோ 250 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன, சில தினசரி 2 ஜிபி இணையத்தை வழங்குகின்றன.

ரூ. 250க்கு கீழே Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல்லின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர் வரம்பற்ற குரல் அழைப்பு, மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் மொத்தம் 1ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். ஏர்டெல்லின் ரூ.179 திட்டத்தில், 28 நாட்களுக்கு மொத்தம் 2ஜிபி இணையம், எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

ரூ.250க்கு கீழ் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்
வோடபோன் ஐடியாவின் ரூ.179 திட்டத்தில், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் மொத்தம் 2ஜிபி டேட்டா கிடைக்கும். Vi இன் ரூ.199 திட்டத்தில், 18 நாட்களுக்கு தினமும் 1ஜிபி இணையம், எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும்.

ALSO READ | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News