அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!

Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2024, 08:08 PM IST
  • அதிக மைலேஜ் கொடுக்கும் அட்டகாசமான பைக்!
  • உலகின் முதல் CNG பைக்
  • பஜாஜ் பைக்கின் மைலேஜ்
அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்! title=

இருசக்கர வாகனங்கள் மிகவும் சுலபமாக கையாளக்கூடியவை, சிக்கனமானவை என்பதால், கார்கள் வைத்திருப்பவர்கள்கூட, இருசக்கர வாகனங்களையும் வைத்திருப்பது இயல்பான ஒன்று. என்ன இருந்தாலும், இருசக்கர வாகனத்தைப் போல நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுவதில்லை என்றே பலர் சொல்கின்றனர். அதற்கு காரணம், இருசக்கர வாகனங்கள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பைக் அல்லது காரை பயன்படுத்துவது நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு செலவை அதிகரிக்கிறது. அதில் சில பைக்குகள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. குறைவான செலவில் பயணிக்க உதவும் இரு சக்கர வாகனங்களில், இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பது பைக்குகள். பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் இவை. நூறு ரூபாய் என்ற மலிவான விலையில் 80 கிலோ மீட்டர் வரையிலான தொலைவு செல்ல இந்த பைக்குகள் உதவும்.

ஹோண்டா ஷைன் 100 ( Honda Shine 100) 
98.98 cc இன்ஜின் கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 7.38 PS பவரையும், 8.05 Nm டார்க்கையும் வழங்குகிறது.  இந்த பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் தரும்.

மேலும் படிக்க | சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன?

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ரூ.76,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இது ஒரு லிட்டருக்கு 80 கிமீ மைலேஜை வழங்குகிறது, நடுத்தர வர்க்கத்தினருக்கு சிக்கனமான தேர்வான இந்த பைக்கில் 8.02 பிஎஸ் பவர், 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 97 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி
உலகின் முதல் CNG பைக், Bajaj Freedom 125 CNG, இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. 95,000 ரூபாய் முதல் இதன் விலை தொடங்குகிறது. 125 சிசி எஞ்சின் கொண்ட பஜாஜ் ஃப்ரீடம், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 130 கிமீ மைலேஜையும், பெட்ரோலை பயன்படுத்தும்போது லிட்டருக்கு 67 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.

பஜாஜ் பிளாட்டினா
102 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பஜாஜ் பிளாட்டினா பைக், 7.79 பிஎச்பி பவரையும், 8.34 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. லிட்டருக்கு 72 கி.மீ மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.61,000 (எக்ஸ்-ஷோரூம்). மாடலுக்கு ஏற்றாற்போல விலையில் சிறிதளவு மாறுபாடு இருக்கும்.

டிவிஎஸ் ஸ்போர்ட்
109 சிசி இன்ஜினைக் கொண்டுள்ள டிவிஎஸ் ஸ்போர்ட், 8.07 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் தரும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,881 முதல் ரூ.71,000 வரை மாடலுக்கு ஏற்றாற்போல மாறுபடும்.

மேலும் படிக்க | சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News