பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனை ஏப்ரல் 1 முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Mi இன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி-யில் கிடைக்கும் சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த டீலின் மூலம் ரூ.59,999 விலை கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.27,949க்கு வாங்கலாம்.
பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனை: Mi ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள்
பிளிப்கார்டில் Mi 5X (50 இன்ச்) அல்ட்ரா எச்டி (4கெ) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி, அதன் அசல் விலையான ரூ.59,999க்குப் பதிலாக 31% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.40,999க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் போது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ. 2,050 தள்ளுபடி பெறலாம். இதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.38,949 ஆகக் குறையும்.
எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் டிவியின் விலை மேலும் குறையும்
Mi 5X (50 இன்ச்) அல்ட்ரா எச்டி(4கெ) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் டீலில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் மலிவாக வாங்கலாம்.
மேலும் படிக்க | பம்பர் ஆபர்! ரூ.5000 வரை விலைகுறைந்தது இந்த Samsung போன்
பிளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு பதிலாக இந்த டிவி-ஐ வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், டிவி-யின் விலை வெறும் ரூ.27,949 ஆக குறைந்துவிடும்.
Mi 5X (50 இன்ச்) அல்ட்ரா எச்டி (4கெ) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்கள்
Mi வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி 50 இன்ச் அல்ட்ரா ச்டி (4கெ) எல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவியில், 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம், 40வாட் ஒலி வெளியீடு மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவை கிடைக்கும். Mi 5X (50 இன்ச்) அல்ட்ரா ச்டி (4கெ) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளையும் ஆதரிக்கிறது.
மேலும் படிக்க | ஆப்பிளின் இந்த 6 அம்சங்கள் இந்தியாவில் செயல்படாது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR