Fuel Efficiency Norms: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், தரமான வாகனங்களை மார்கெட்டில் கொண்டு வரும் வகையிலும் அடுத்த ஆண்டு, அதாவது ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு முதல் எரிபொருள் நுகர்வு தரச்சான்று அனைத்து வணிக வாகனங்களுக்கும் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தரச்சான்று பெற்ற வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். குறிப்பிட்ட மைலேஜ் கொடுக்காத வாகனங்கள் சந்தையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.
இதுதொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஏப்ரல் 2023 முதல் அனைத்து வணிக வாகனங்களுக்கும் எரிபொருள் திறன் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விதியின் கீழ் அனைத்து லாரிகள் மற்றும் பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் சிஎன்ஜி கார்
அதன் ஒருபகுதியாக இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட இருக்கிறது. ஏப்ரல் 2023 முதல், அனைத்து டிரக்குகளும் பேருந்துகளும் எரிபொருள் நுகர்வு தரநிலையை அதாவது எரிபொருள் நுகர்வு தரநிலை மற்றும் எரிபொருள் நுகர்வு இலக்கை சந்திக்க வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் வணிக வாகனங்களின் எரிபொருள் திறன் பற்றிய தகவல்களைப் பெறுவார்கள். இதன்மூலம் அதிக மைலேஜ் தரும் டிரக்குகள் மற்றும் பேருந்துகளின் பயன்பாட்டு எண்ணிக்கையை அதிகரிக்கும்.
புதிய விதியின்படி, வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மொத்த டீசலில் 70 சதவீதம் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்காக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டுநர் தவிர 8 பேர் இருக்கை வசதியுடன் வரும் கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு எரிபொருள் திறன் விதிமுறைகள் கட்டாயம் பொருந்தும்.
மேலும் படிக்க | Luxury and Technology Car: ஹூண்டாய் டக்ஸன் கார் அறிமுகமானது
வாகன சோதனையில் கிடைக்கும் முடிவுகளை மத்திய அரசு உரிய நிறுவனங்களுக்கு கொடுக்கும். வதிமுறைகளை பூர்த்தி செய்திருக்கிறதா? இல்லையா? என்பதை வாகன உற்பத்தியாளர்கள் தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல் வாகனத்தின் தரத்தை உயர்த்த பரிந்துரைக்கப்படுவார்கள். அதேநேரத்தில், இந்த எரிபொருள் பயன்பாடு தரச்சான்று என்பது இந்தியாவிற்குப் புதிதல்ல. ஏற்கனவே எம்1 கேட்டகிரி வாகனங்களுக்கு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ