விளையாட்டு வீரர்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் ஸ்போர்ட்ஸ் ரோபோக்கள்! ஒலிம்பிக்கிலும் ரோபோ???

Google DeepMind Robot : மனிதர்கள் மட்டும் விளையாடும் ஒலிம்பிக்கில் ரோபோக்கள் நுழையுமா? விஞ்ஞானிகளின் முயற்சியால் விளையாட்டு வீரர்களாகும் ரோபோக்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 9, 2024, 09:38 AM IST
  • விளையாட்டு வீரராக களமிறங்கும் ரோபோ
  • ஒலிம்பிக்கில் ரோபோக்களும் பங்கேற்குமா?
  • ரோபோக்களின் விளையாட்டுத் திறன்
விளையாட்டு வீரர்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் ஸ்போர்ட்ஸ் ரோபோக்கள்! ஒலிம்பிக்கிலும் ரோபோ??? title=

தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளில் காலத்துக்கேற்ப அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விளையாட்டுகள் முதல் விளையாடும் விதிமுறை, போட்டியாளர்கள், விளையாட்டுக்கான கருப்பொருள் என அனைத்தும் அவ்வப்போது மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், மனிதர்கள் மட்டும் விளையாடும் ஒலிம்பிக்கில் ரோபோக்கள் நுழையுமா? என்ற கேள்வி தற்போது வைரலாகிறது.

இந்தக் கேள்விகளுக்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம். கூகுளில் ரோபோ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோக்கள் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் விளையாட்டு வீரர்களுக்கு போட்டியாக களம் இறங்கியிருப்பது ரோபோக்கள் தான். 

வைரலாகும் வீடியோ...

டேபிள் டென்னிஸ் போட்டியில், வெவ்வேறு நிலைகளில் உள்ள வீரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டிகளில் 45 சதவீத போட்டிகளில் ரோபோ வெற்றி பெற்றது. மொத்தம் 29 பேருடன் ரோபோக்களை விளையாடவிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ரோபோக்கள் அபாரமாக விளையாடின.

ரோபோக்களின் வெற்றி
கலந்துக் கொண்ட அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரர்களை ரோபோ வெற்றி கொண்டது. ஆனால், 55 சதவீத போட்டிகளில் இடைநிலை வீரர்களை மட்டுமே தோற்கடித்தது.

மேலும் படிக்க | இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய 'ஓட்டை' - கம்பீருக்கு தலைவலியை கொடுக்கும் 3 விஷயங்கள்!

கூகுள் டீப் மைண்ட் (Google DeepMind) ஆராய்ச்சியாளர்கள் டேபிள் டென்னிஸை நல்ல அளவில் விளையாடக்கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் இது மிகப் பெரிய சாதனையாகும். இந்த சிறப்பு ரோபோவில் 6 DoF ABB 1100 கை உள்ளது, இந்த சிறப்பு வகையிலான கை, முன்னும் பின்னும் நகரும். வெவ்வேறு நிலைகளில் உள்ள டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு எதிராக 45 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோக்கள், விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வாய்ப்பைத் தரும். விளையாட்டில் சிந்தனைத்திறன் மட்டுமல்ல, துரிதமாக முடிவெடுக்கும் திறனும், வரும் பந்தை எப்படி கையாள்வது என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ளும் திறனும் தேவை.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்களின் சிந்திக்கும் திறனுக்கும் மனிதர்களின் சிந்திக்கும் திறனுக்குமான நேரடி போட்டியாக இந்த ரோபோக்களின் பயன்பாடு இருக்கும். இது விளையாட்டு வீரர்களின் திறனையும் மேம்படுத்தும் என்று விளையாட்டுத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரோபோக்களின் சிந்தனைத் திறன்

விளையாட்டு வீரர்களுடன் களம் கண்ட ரோபோ நல்ல வீரர்களுக்கு எதிராக நிறைய பிரச்சனைகளை சந்தித்தது, நன்கு பயிற்சி பெற்ற வீரர்களுடன் விளையாண்ட அனைத்து போட்டிகளிலும் ரோபோ தோல்வியடைந்தது. இது, என்ன இருந்தாலும் மனிதர்களுடன் ஒப்பிடும்போது ரோபோவின் திறன் குறைவு என்பதை நிரூபிக்கிறது. ஆனால், விஞ்ஞானிகள் குறைபாடுகளை களைந்து, ரோபோவை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விளையாட்டு வீரர்களின் அனுபவம்

விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் இந்த ரோபோ கடும் போட்டி தரும் என்று கூறப்பட்டாலும், சில குறைபாடுகள் இருந்தாலும், இந்த போட்டிகளில் கலந்துக் கொண்ட 29 விளையாட்டு வீரர்களில் 26 பேர் ரோபோவுடன் மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த அனுபவம் பிடித்துள்ளது என்றும், வித்தியாசனமானதாக இருப்பதாகவும் சொல்கின்றனர்.

மேலும் படிக்க | நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி... வெறித்தனமாக வீசி தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் - யார் இந்த அர்ஷத் நதீம்?

விளையாட்டு வீரனாக மாறிய ரோபோ எப்படி வேலை செய்கிறது?

பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதற்காக இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகலுக்கு ஏற்றாற்போல பாகங்கள் மாற்றியமைக்கப்படும். இந்த ரோபோவில் சிந்தித்து முடிவெடுக்கும் பெரிய பகுதி உள்ளது. இந்த ரோபோவை கற்பனை சூழ்நிலையிலிருந்து நிஜ உலகிற்கு கொண்டு வர சிறந்த முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோபோக்கள், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.

பந்து கையாள்தல்
விளையாட்டின் போது என்ன நடக்கிறது மற்றும் எதிரணி வீரர்களின் செயல்திறனை தொடர்ந்து கவனிப்பதன் மூலம் தன்னை மாற்றிக் கொள்ள முடியும். இருப்பினும், ரோபோ வேகமான பந்துகளைக் கையாள்வதில் சிக்கலை எதிர்கொள்கிறது, ஏனெனில் கணினி பதிலளிக்க சிறிது நேரம் எடுக்கும், ஒவ்வொரு முறையும் விளையாட்டை இடைநிறுத்த வேண்டும், மேலும் கற்றுக்கொள்ள குறைந்த தகவல்கள் உள்ளன. இந்த சிக்கலை தீர்க்க, விஞ்ஞானிகள் புதிய வகையான கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் இயந்திரத்தில் மேம்பாடுகள் பற்றி யோசித்து வருகின்றனர்.

ரோபோக்களுக்கு கற்பித்தது எப்படி?
இந்த ரோபோக்களுக்கு கற்பனை உலகில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு தொடர்பான கல்வி அளிக்கப்பட்டது. அத்துடன், அங்கு சுய கற்றல் மற்றும் மற்றவர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் வழிகளும் கற்பிக்கப்பட்டன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நிஜ உலகில் வேலை செய்யத் தயாராகிவிட்டது ரோபோ. தற்போது களத்தில் இறங்கிய ரோபோவி செயல்பாடுகளின் அடிப்படையில் மீண்டும் அதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்படும் என Google DeepMind விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News