15 ஆண்டுகால வெற்றிப்பாதை பயணத்தில் கூகிள்-ன் Gmail!

கூகிள் நிறுவனத்தில் மின்னஞ்சல் வசதியான Gmail மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது!

Last Updated : Apr 1, 2019, 05:03 PM IST
15 ஆண்டுகால வெற்றிப்பாதை பயணத்தில் கூகிள்-ன் Gmail! title=

கூகிள் நிறுவனத்தில் மின்னஞ்சல் வசதியான Gmail மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது!

கடந்த 2004-ஆம் ஆண்டு பால் புச்சீத் என்பவரால் உறுவாக்கப்பட்ட Gmail சேவையானது அறிமுக சலுகையாக பயனர்களுக்கு ஒரு ஜிகாப்பைட் இலவச நினைவதகத்தை வழங்கி இணைய உலகில் ஒரு பிரலையத்தை உண்டாக்கியது.

உலக வளர்ச்சியுடன் ஒன்றி வளர்ந்து வரும் Gmail ஆனது தற்போது பயனர் ஒருவருக்கு 15GB வரையில் இலவச நினைவகத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் பயனர்கள் சுமார் 50MB அளவுள்ள மின்னஞ்சல்களை பெறவும், 25MB அளவு வரையில் மின்னஞ்சல்களை அனுப்பவும் அனுமதிக்கிறது

அதைவிட அதிக அளவு கோப்புகளை அனுப்ப ஏதுவாக கூகிள் ட்ரைவ் வசதியினையும் வழங்குகிறது.

சுமார் 1.5 மில்லியன் மாதாந்திர ஆக்டிவ் பயனர்களை கொண்டுள்ள கூகிள் இன்று தனது 16-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. 

கூகிளின் Gmail சேவையானது தனிநபர் பயனருக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வரும் போதிலும், தொழில் நிறுவனங்களுக்கு கட்டண சேவையாக அளிக்கப்பட்டு வருகிறது. தனிநபர் Gmail கணக்குளை காட்டிலும் வேர்ட் ப்ராசசர், பிரசன்டேசன் போன்ற அம்சங்கள் தொழில் நிறுவன கணக்குகளுக்க அளிக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக தெரிகிறது.

Gmail வெளியிடப்பட்டு ஒரு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட கூகிள் மேம்ப்ஸ், தற்போது அதிக பயனர்களை கொண்ட ஒரு செயலியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து தொழில்நுட்பங்களிலும் கால் பதித்து வரும் கூகிள் Android மற்றும் YouTube ஆகியவற்றையும் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News