Big Fight: டாட்டாவுக்கு போட்டியாக வரும் ஹவால் SUV..!

டாட்டாவின் எஸ்.யூ.வி மோட்டார்ஸூக்கு போட்டியாக இந்தியாவில் கால்பதிக்கிறது ஹவால் எஸ்.யூ.வி.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:16 PM IST
Big Fight: டாட்டாவுக்கு போட்டியாக வரும் ஹவால் SUV..!  title=

இந்தியாவின் எஸ்.யூ.வி மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஹவால் எஸ்.யூ.வி கார், இந்தியாவுக்கு வர இருப்பதை அறிவித்துள்ளது. கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், டார்கோ என்ற பிஸ்னஸ் பெயரை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போவை நடத்திய இந்த நிறுவனம், இந்தியாவில் நுழைய இருப்பதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டது.

ALSO READ | Jio அசத்தல்; ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டம்

ஆனால், இந்தியா - சீனா எல்லைப்பதற்றம் காரணமாக, இதன் அறிமுகம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் டார்கோ என்ற பெயரில் இந்தியாவில் இதன் எஸ்.யூ.வி கார்கள் நுழைய உள்ளன. ஹவால் டார்கோ சீனாவில் பிக் டாக் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இது உலக சந்தையில் இரண்டு எஞ்சின் விருப்பங்களைக் கொண்ட உறுதியான SUV ஆகும். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 169 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 211 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். 

ஹவால் டார்கோ தோற்றத்தில் மிகவும் உறுதியானது. ஒருங்கிணைந்த LED DRL கொண்ட வட்டமான LED ஹெட்லேம்ப்கள், ஆல்-ஓவர் பாடி கிளாடிங், பெரிதான கருப்பு கிரில், ஃபாக் லைட்டுகள் மற்றும் கான்ட்ராஸ்ட் நிற ORVM ஆகியவற்றை கொண்டிருக்கும். இரண்டு வண்ணங்களுடன் அலாய் வீல் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 

இந்த மாடல் காரில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று-ஸ்போக் மல்டி-ஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற கார்களின் மார்க்கெட்டுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | Tech Tips: லேப்டாப்பின் டச்பேட் பணிபுரியவில்லையா? இவற்றை செய்து பாருங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News