Truecaller மூலம் வாட்ஸ்அப்பில் வரும் SPAM அழைப்புகளை தடுப்பது எப்படி?

அதிகரித்து வரும் வாட்ஸ்அப் மோசடிகளை எதிர்த்துப் போராட, ட்ரூகாலர் பயனர்கள் வாட்சப்பில் வரும் ஸ்பேம் செய்திகளை தடுக்க ட்ரூகாலர் மெட்டாவுடன் கைகோர்த்துள்ளனர்.   

Written by - RK Spark | Last Updated : May 9, 2023, 12:21 PM IST
  • ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
  • வாட்ஸ் அப் பயனர்கள் மாதத்திற்கு சராசரியாக 17 தேவையற்ற அழைப்புகளைப் பெறுகின்றனர்.
  • புதிய ஐடி கண்டறிதல் அம்சமானது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
Truecaller மூலம் வாட்ஸ்அப்பில் வரும் SPAM அழைப்புகளை தடுப்பது எப்படி?  title=

இந்தியாவில் சைபர் க்ரைம் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றது, மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் மற்றும் சில மெசேஜிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது பெரும்பாலான மோசடிக்காரர்கள் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான மெசேஜிங் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும்.  மெட்டாவுக்குச் சொந்தமான இந்த மெசேஜிங் செயலியானது இந்தியாவில் மாதந்தோறும் சுமார் 500 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டு, மிகப்பெரிய தளமாக விளங்குகிறது.  மில்லியன் கணக்கில் பயனர்களை கொண்டிருப்பதால் மோசடிக்காரர்கள் தங்கள் மோசடி செயல்களை அரங்கேற்ற இந்த தளத்தை குறிவைக்கின்றனர்.  அதிகரித்து வரும் வாட்ஸ்அப் மோசடிகளை எதிர்த்துப் போராட, ட்ரூகாலர் பயனர்கள் பிளாட்ஃபார்மில் ஸ்பேம் செய்திகளை அடையாளம் கண்டு தடுக்க உதவும் மெட்டாவுடன் கைகோர்த்துள்ளனர். 

மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் மொபைலில் உள்ள இந்த 11 ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்!

 

அழைப்பாளர் ஐடி மற்றும் ஸ்பேம் தடுக்கும் சாஃப்ட்வெர் - ட்ரூகாலர் ஆனது அதன் அழைப்பாளர் அடையாள சேவையை வாட்ஸ் அப் மற்றும் பிற மெசேஜிங் செயலிகளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.  தற்போது பீட்டா கட்டத்தில் உள்ள இந்த அம்சம், மே மாதத்தின் பிற்பகுதியில் உலகளவில் அனைத்து தளங்களுக்கும் வெளியிடப்படும் என்று ட்ரூகாலர் தலைமை நிர்வாகி ஆலன் மமேடி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையின்படி, ட்ரூகாலர் வாட்ஸ்அப் மற்றும் பிற மெசேஜிங் செயலிகளுக்கான பயன்பாடுகளுக்கான அழைப்பாளர் அடையாள அம்சத்தை மே மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் ஸ்பேம் செய்திகளை அடையாளம் காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.  ட்ரூகாலரின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆலன் மாமெடி கூறுகையில், இந்தியா போன்ற நாடுகளில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது, பயனர்கள் மாதத்திற்கு சராசரியாக 17 தேவையற்ற அழைப்புகளைப் பெற்று சிரமத்திற்குள்ளாகின்றனர்.  

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய்-ன் ஆலோசனையின்படி, தங்கள் நெட்வொர்க்கில் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை வடிகட்ட AI ஐப் பயன்படுத்தும் ஒரு தீர்வை உருவாக்க, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், ட்ரூகாலர் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக, வாட்ஸ்அப் மூலம் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்திருக்கிறது, தற்போது டெலிமார்க்கெட்டர்கள் வாட்ஸ் அப் மூலம் மக்களை தொடர்புகொள்ளும் புதிய முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2021ல் ட்ரூகாலர் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான டெலிமார்க்கெட்டிங் மற்றும் மோசடி அழைப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  சராசரியாக, பயனர்கள் மாதத்திற்கு சுமார் 17 ஸ்பேம் அழைப்புகளைப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளது.  வாட்ஸ் அப் மூலம் நடைபெறும் மோசடியை தடுக்க, ட்ரூகாலர் அதன் ஸ்பேம் கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அத்தகைய அழைப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களை பிளாக் செய்யவும் அல்லது ரிப்போர்ட் செய்யவும் பயனர்களை அனுமதிக்கிறது.  தற்போது இந்த புதிய ஐடி கண்டறிதல் அம்சமானது பீட்டா வெர்ஷனில் உள்ளது மற்றும் எதிர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ் அப்பில் ட்ரூகாலர் ஸ்பேம் பயன்படுத்துவது எப்படி?

- கூகுள் ப்ளே ஸ்டோரில் ட்ரூகாலர் என்று தேட வேண்டும்.

- லிஸ்டிங் பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பீட்டா சோதனையாளர் பிரிவின் கீழ் உள்ள ஜாயின் என்கிற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- சிறிது நேரம் காத்திருந்து, பிளே ஸ்டோரில் மீண்டும் ட்ரூகாலரை தேட வேண்டும்.

- பீட்டா அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

- ட்ரூகாலரை திறந்து செட்டிங்ஸ் என்பதற்கு செல்ல வேண்டும்.

- அழைப்பாளர் ஐடியை டேப் செய்து, வாட்ஸ் அப் மற்றும் பிற மெசேஜிங் செயலிகளில் தெரியாத எண்ணை அடையாளம் காண டோக்ள் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் வழியாக அரங்கேறும் புதுவகை மோசடி; தப்பிப்பது எப்படி?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News