வைகாசி மாத சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு அற்புதமான எதிர்காலம்? ஒரு மாத ராசிபலன்!

Vaigasi Month Suirya Peyarchi May 14:  நாளை, அதாவது மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார். நாளை முதல் ஜூன் 14 வரை சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் சூரியப் பெயர்ச்சி பலன்கள் இவை... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2024, 11:54 AM IST
  • வைகாசி மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்
  • மே 14ம் தேதி சூரியப் பெயர்ச்சி
  • ரிஷப ராசிக்கு பெயரும் சூரிய பகவான்
வைகாசி மாத சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு அற்புதமான எதிர்காலம்? ஒரு மாத ராசிபலன்! title=

Sun Transit May 14: சூரியன் தனது ராசியை மாற்றும் நாளன்று தமிழ் மாதம் பிறக்கிறது. ஒரு ஆண்டில் 12 சூரியப் பெயர்ச்சி நடைபெறுகிறது. சித்திரை, வைகாசி... பங்குனி என 12 மாதங்களின் முதல் நாளன்று சூரியன் பெயர்ச்சியாகிறார். இன்று வரை சூரியன் மேஷ ராசியில் இருக்கிறார். மே 14 நாளை, சூரியன் ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதை விருஷப சங்கராந்தி என்றும் அழைப்பார்கள்.

குரு சஞ்சாரத்தால் ஏற்பட்ட குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி என பல ராசி பெயர்ச்சிகளால் மேஷம் கும்பம் உட்பட சில ராசிகளுக்கு நன்மை இருந்தால், மீனம் சிம்மம் என சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மாறுபட்ட பலன்களை வழங்கும். ரிஷபம் ராசிக்குள் இருக்கும் குருவுடன் நாலை சூரியனும் இணைவதால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குரு பகவான் இணைவதும் ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த இரு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்பதால், சிலருக்கு அமோகமான அதிர்ஷ்டம் ஏற்பட்டால், சிலருக்கு சொல்ல முடியாத அளவு பிரச்சனைகள் ஏற்படும். நாளைய சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.  

2024 க்ரோதி வருட வைகாசி மாத பலன்கள்

மேஷம்

ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும், சாதகமான வாய்ப்புகள் அமையும். பண வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். மூத்தவர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெற்றால், வாழ்க்கையில் தெளிவு ஏற்படுத்தும். ஆன்மீகத்தில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும்.  வேலைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். 

ரிஷபம்

இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும் அதே நேரத்தில் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருவாயை மேம்படுத்தன் அவசியம் புரியும், தீர்க்கமான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம் இது.

மிதுனம்

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பாசத்தை அதிகரிக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துக் கொடுக்கும். வியாபாரத்தில் சுணக்கமான சூழல் ஏற்படும், ஆனால் குடும்பத்தினரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.  

கடகம்

செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை பிறருடன் பகிர்வதை தவிர்க்கவும். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. பிறரின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதால் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பது கடினமாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 

மேலும் படிக்க | சுக்கிரன் அஸ்தமனம்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!

சிம்மம்

ஆலய திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கும் சந்தர்ப்பம் வரும்.  வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.

கன்னி

நண்பர்களின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிப்பதால், பலரின் பாராட்டுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனதில் இடம் கிடைக்கும்.  .

துலாம்

வாய்ப்புகள் தடைபட்டதால் ஏற்பட்ட கவலைகளை போக்கும் வாய்ப்புகள் மீண்டும் வந்து கதவைத் தட்டும். பணியிடத்தில் பணி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்க முடியாது. 

விருச்சிகம் 

கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. வித்தியாசமான செயல்பாடுகளால் சர்ச்சைக்கு உள்ளாவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். கடன் வாங்குவதைத் தவிர்த்தால் சற்று நிம்மதி கிடைக்கும். 

தனுசு 

பயணங்கள் கைகொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். வாகனங்களை மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. 

மகரம் 

வேலையாட்கள் உங்களுக்கு மனநிறைவு தரும் காலம் இது. மாணவர்களுக்கு தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும்.   

கும்பம் 

இந்த நேரம் தொழிலுக்கு சாதகமாக இருக்கும். பதவி உயர்வு பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நேரம் இது. வலுவான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. புதிய வேலை கிடைப்பதற்கான வாப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், லாபம் கிடைக்கும் காலம் இது. இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமானது மற்றும் நன்மை பயக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் 13 மே 2024: இன்று ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News