Chatting WhatsApp With Safety : உங்கள் மொபைல் எண்ணைப் பகிராமல் வாட்ஸ்அப்பில் ஒருவருடன் இணைய விரும்புகிறீர்களா? இதுவும் சாத்தியம் தான். ஒருவை தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை என்பது இன்றைய காலகட்டத்தில் நமது கையில் இருக்கும் மொபைலே மாபெரும் ஆபத்தாக மாறியுள்ளது. வெவ்வேறு சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாறவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தும் செயலிகளின் பயன்பாடு சரளமாகிவிட்ட நிலையில், நமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.
தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப் செயலி மிகவும் முக்கியமானதாக மாறிவிட்ட நிலையில், மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகிவிட்டது. நமது பாதுகாப்பை சமரசம் செய்யாமல் வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை பகிர வழிகள் உள்ளன.
ஏனென்றால், ஹேக்கர்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி செய்திகளைப் படிக்கலாம் என்பது மட்டும் அல்ல, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுக்கலாம். எனவே வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீடுகளைப் பயன்படுத்தி சுயவிவரங்களைப் பகிர அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம், மொபைல் எண்ணை யாருக்கும் சொல்லாமலேயே மற்றவர்களுடன் இணைக்க உதவுகிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை... அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்
மொபைல் எண்ணை பகிராமல் வாட்ஸ்அப் சாட்டிங் செய்ய சுலபமான வழிகள்
உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும். பிறகு செட்டிங் என்ற அம்சத்தைத் திறந்து உங்கள் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக ‘Share’ விருப்பத்தை கிளிக் செய்யவும். அதில் 'QR குறியீடு பகிர்வது' என்ற அம்சத்தைத் தேர்வு செய்யவும். அதிலுள்ள QR குறியீட்டை, தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு பகிரவும்.
பாதுகாப்பு மேம்பாடு
WhatsApp QR குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பு அதிகரிக்கிறது. இந்த அம்சம் உங்கள் தனியுரிமையைப் பராமரிக்கும் அதேவேளையில் மற்றவர்களுடன் இணைவதற்கு வசதியான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது.
தனிப்பட்ட நபரின் தரவுகள் மட்டுமல்ல, தொழில் ரீதியாக நெட்வொர்க்கிங் செய்தாலும் அல்லது நண்பர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும்போது, வாட்ஸ்அப் QR குறியீடு மூலம் உங்கள் சுயவிவரத்தைப் பகிர்வது பாதுகாப்பான மற்றும் திறமையான தீர்வை வழங்குகிறது.
QR குறியீடுகளை வாட்ஸ்அப்பில் பயன்படுத்துவதன் நன்மைகள்
பல்துறை மற்றும் பயன்பாட்டின் எளிமை காரணமாக வாட்ஸ்அப் QR குறியீடுகள் பிரபலமடைந்துள்ளன. உங்கள் வாட்ஸ்அப் சுயவிவரத்தைப் பகிர QR குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், தகவல்தொடர்பு செயல்முறையை ஒழுங்குபடுத்தலாம் மற்றும் தேவையற்ற வெளிப்பாட்டிலிருந்து உங்கள் மொபைல் எண்ணைப் பாதுகாக்கலாம்.
QR குறியீடுகள் பல்வேறு சாதனங்கள் மற்றும் இயங்குதளங்களுடன் இணக்கமாக உள்ளன என்பதால் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்வதற்கான வசதியான விருப்பமாக அமைகின்றன.
மேலும் படிக்க | மலிவு விலையில் தரமான 5ஜி போன் வேண்டுமா? இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 13 5ஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ