வரலாறு காணாத வெப்பத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் நீங்கள் கார் வைத்திருப்பவர் என்றால், டையர் லைஃப் குறித்து கவனம் கொள்வது அவசியம். கவனக்குறைவாக இருந்தீர்கள் என்றால், அதிவேகம் செல்லும்போது விபத்து நேரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் கார் டயர் பஞ்சரை தவிர்ப்பது மட்டுமல்லாமல், லைஃபையும் அதிகரிக்கலாம்.
டயரில் இருக்கும் காற்று
கோடை காலத்தில் கார் டயரில் அதிகப்படியான காற்று இருப்பது ஆபத்தானது. அதாவது, அளவை விட அதிகமாக இருந்தால், டயர் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால், மற்ற நாட்களைவிட கோடை காலத்தில் குறிப்பிட்ட அளவை விட இரண்டு அல்லது 3 பாயிண்டுகள் காற்றை குறைவாக வைத்திருக்க வேண்டும். நைட்ரஜன் காற்றை நிரப்பினால் நல்லது. அவ்வப்போது கார் டயரின் காற்றை நீங்கள் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மேலும் படிக்க | ஜியோவை தொடர்ந்து அசத்தலான Disney+ Hotstar பிளான்களை கொண்டுவந்த ஏர்டெல்: விவரம் இதோ
டயரின் ஆயுட்காலம்
கார் டயரின் ஆயுட்காலத்தை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், அவ்வப்போது கார் டயர்களை மாற்றுவது அவசியம். குறிப்பிட்ட காலத்தில் முன்பக்க டயர்களை பின்புறத்தில், பின்பக்க டயர்களை முன்புறத்துக்கும் மாற்ற வேண்டும். அதிகபட்சம் 6 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்குப் பிறகு இரண்டு டயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நான்கு டயர்களும் ஒரே மாதிரியான தேய்மானத்தை எட்டும். இதன் மூலம் டயரின் ஆயுட்காலத்தை கணிசமாக அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | Budget Smart Phones: ரூ.6000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான போன்கள்
காரை சரியான வழியில் ஓட்டுங்கள்
டயர்களின் ஆயுட்காலம் அதிகமாக வேண்டும் என்றால், எந்தக் காலத்திலும் சரியான பாதையை தேர்ந்தெடுத்து ஓட்ட வேண்டும். கரடு முரடான பாதைகளில் நீங்கள் காரை செலுத்தும்போது விரைவாக தேய்மானம் அடைய வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கோடையில் சாலைகள் சூடாக இருப்பதால் வேகமாக தேய்மானம் அடையும். இதனால், சரியான பாதையில் கார்களை ஓட்டிச் செல்வது அவசியம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR