பிரபல வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான HP, இந்தியாவில் தனது கையடக்க புகைப்பட அச்சுப்பொறியினை அறிமுகம் செய்கிறது...
நேர்த்தியான மற்றும் மெல்லிய வடிமைப்பில் உள்ள இந்த சாதனம் ஆனது முந்தி பதிப்பை காட்டிலும் 30% (2.3" x 3.4") பெரிய புகைப்படங்களை அச்சிடும் என தெரவிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு - இரண்டு வண்ணங்களில் இந்த HP Sprocket Plus இந்தியாவில் கிடைக்கும் என HP அறிவித்துள்ளது.
HP Sprocket Plus மற்றும் இந்த இயந்திரத்திற்கு ஏற்ற 10 அச்சு பேப்பர்களுடனும் தற்போது Amazon ஆன்லைன் விற்பனை தளத்தில் ரூ. 8,999-க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.799 செலுத்தும் பட்சத்தில் 20 HP ZINK பேப்பர் பேக் இந்த சாதனத்துடன் கிடைக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
IOS மற்றும் Android இயங்குதளம் கொண்ட மொபைல்கள் மூலம் இந்த சாதனத்தை இயக்கும் வசதியினையும் HP Sprocket Plus கொண்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இருக்கும் புகைப்படங்களை நேரடியாக அச்சிட HP Sprocket Plus ஒப்பளிக்கிறது.
ஆக்மென்ட்ஸ்ட் ரியாலிட்டி எனப்படும் இந்த புதிய அம்சதிதன் மூலம் சமூக ஊடகங்களில் உள்ள புகைப்படங்களை பார்க்கவும், பார்க்கும் புகைப்படத்தினை வடிமைக்கப்பட்ட சுய வாட்டர்மார்க்குடன் அச்சிடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதி பல வடிகட்டிகள், உரை எல்லைகள், ஸ்டிக்கர்கள் மற்றும் எமோஜிகள் ஆகியவற்றுடன் புகைப்படங்களை அச்சிடவும் உதவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
HP Sprocket Plus ஆனது கைப்பேசிகளின் ப்ளூடூத் மூலம் இணைக்கும் வசதி பெற்றிருப்பதால் பயனர்கள் எளிதில் பயன்படுத்தலாம். மேலும் ZINK தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் இந்த HP Sprocket Plus மைக்ரோ அல்லது டோனர் கார்ட்ரிட்ஜ்கள் இல்லாமல் வண்ணமயமான, மென்மையாக்கல்-ஆதாரம், நீர் எதிர்ப்பு புகைப்படங்களை 2.3" x 3.4" அளவில் அச்சிடும் திறன் படைத்தது.