சென்னை: பேருந்து அளவிலான வாகனம் ஒன்றில், 1000 கி.மீ வேகத்தில் அதி வேகத்தில் பயணிப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஹைப்பர்லூப் (Hyperloop) என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த வாகன கட்டமைப்பு, நவீன உலகில் ஐந்தாவது தலைமுறை போக்குவரத்து வாகனம் எனக் கூறப்படுகிறது.
இந்த கருத்தை அமெரிக்க கோடீஸ்வரர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் எலோன் மஸ்க் 2013 இல் முன்மொழிந்தார். அப்போதிருந்து, உலகெங்கிலும் உள்ள பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் யோசனைகளை ஆராய்ந்து, இந்த வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கற்பனையை யதார்த்தமாக்கும் முயற்சியில் பல முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology Madras) அவிஷ்கர் (Avishkar) என்ற குழுவை உருவாக்கி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. 40 பேர்கொண்ட இந்தக் குழு, ஸ்பேஸ்எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டி 2019 (SpaceX Hyperloop Pod Competition 2019)இல் முதல் 21 இடங்களில் இடம் பிடித்தது.
Also Read | OFFER! மலிவான விலையில் ஆப்பிளின் XDR OLED வாங்க அறிய வாய்ப்பு
தற்போது முதலிடத்தைப் பிடிக்க, அவிஷ்கார் குழு தங்கள் முன்மாதிரிகளில் மாற்றங்களைச் செய்து வருகிறது. 2020ஆம் ஆண்டு உலகில் தோன்றிய கொரோனா வைரஸ் அனைத்தையும் சீர்குலைத்தது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இறுதியில் வகுப்புகள் படிப்படியாக ஆன்லைன் மூலமாக தொடங்கியபோது, இந்த திட்டத்தின் பணியும் ஆன்லைன் மூலமாக மீண்டும் தொடங்கப்பட்டது.
லாக் டவுன் காரணமாக மாணவர்கள் அவரவர் ஊரில் இருந்தபோது தான் இந்த கருவியின் வடிவமைப்பு, 3 டி மாடலிங், சிமுலேஷன் மற்றும் மென்பொருள் நிரலாக்கங்கள் 3D modeling, simulation and software programming) அனைத்தும் செய்யப்பட்டன.
தற்போது கல்லூரிக்கு திரும்பிய பிறகு, உற்பத்தி மற்றும் புனையமைப்பு (fabrication) செயல்முறைகளில் வேலை செய்ய அவர்களுக்கு மூன்றரை மாதங்கள் மட்டுமே இருந்தன.
2019 வாகனம் ஒரு எளிய மாதிரியாக இருந்தது, இது ஒரு அடிப்படை மின்சார வாகனத்தைப் போன்றது. எட்டு துணை அமைப்புகளையும் மாற்றியமைத்து தர்போதைய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உந்துவிசை மற்றும் பிரேக்கிங் அமைப்புகளில் மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இதில் அதிகமான பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, இந்தக் குழுவினர் உருவாக்கிய பிரத்யேக டிசி-ஏசி இன்வெர்ட்டரும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
Also Read | TikTok: 3 பில்லியன் பதிவிறக்கங்களுடன் புதிய சாதனை படைத்தது டிக்டாக்
இதில் பொருத்தப்பட்ட பாகங்களில் 30 சதவிகிதம் மட்டுமே வெளியில் வாங்கப்பட்டவை, மீதமுள்ள 70 சதவீத பொருட்களை அவிஷ்கார் குழுவே தயாரித்தது. மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் உள்ளமைவுடன் அவற்றைப் பயன்படுத்தியதாக குழுவினர் கூறுகின்றனர். டம்பர்கள், ஸ்பென்ஷன், மைக்ரோகண்ட்ரோலர்கள் வெளியில் இருந்து வாங்கப்பட்டன. ளை அலமாரியில் இருந்து வாங்க வேண்டியிருந்தது.
ஜூலை 19 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஹைப்பர்லூப் வீக் (European Hyperloop Week) போட்டியில் களமிறங்க இந்த அணி தயாராகி வருகிறது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அணி ஆன்லைனிலேயே பங்கேற்கிறது. வாரம் முழுவதும் நடைபெறும் நிகழ்வு பல தொழில்நுட்ப சுற்றுகளை உள்ளடக்கியது.
போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திறன்கள், கூறுகள் மற்றும் அதன் பின்னால் உள்ள பொறியியல் காரணங்களை விளக்குக்வார்கள். அதைத் தொடர்ந்து, அணிகளின் சோதனை வீடியோக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் செயல்திறன் மற்றும் பல்வேறு அம்சங்களும் மதிப்பீடு செய்யப்படும்.
Also Read | Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்தால் புகாரளிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR