பிஃபா கால்பந்து உலகக்கோப்பை பார்க்க ஆசையா? விவோ கொடுக்கும் சூப்பரான வாய்ப்பு

கால்பந்து உலகக்கோப்பை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, விவோ சூப்பரான ஆபரை அறிவித்துள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2022, 05:11 PM IST
  • விவோ அறிவித்த அதிரடி ஆஃபர்
  • ஸ்மார்ட்போன் வாங்கினால் இலவச டிக்கெட்
  • கால்பந்து உலகக்கோப்பையை பார்க்கலாம்
பிஃபா கால்பந்து உலகக்கோப்பை பார்க்க ஆசையா? விவோ கொடுக்கும் சூப்பரான வாய்ப்பு title=

FIFA World Cup 2022 Tickets: சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் Vivo மிகவும் பிரபலமானது. அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும் நன்கு விற்பனையாகின்றன. ஓணம் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த நிறுவனம் சில புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆஃபர் அது. அதாவது கால்பந்து உலகக் கோப்பை 2022-ஐ இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் பற்றி விரிவாகவும், இலவச டிக்கெட்டுகளை எப்படிப் பெறுவது என்பதையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

Vivo சலுகை

விவோ நிறுவனம் பல கவர்ச்சிகரான ஆஃபர் மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் சுவாரஸ்யமான ஆஃபரையும் அறிவித்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த ஆஃபர் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த சலுகையில், Vivo X80 சீரிஸ், Vivo V25 Pro, Vivo V23e மற்றும் Vivo Y21G போன்ற பல ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கால்பந்து உலகக்கோப்பையை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஸ்மார்போன்களை வாங்குபவர்கள் வாரண்டி 6 மாதம் கூடுதலாகவும், நோ காஸ்ட் EMI ஆப்சனும் கிடைக்கும். 

மேலும் படிக்க | Redmi: குறைந்த விலையில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்; ரெட்மி பிளான்

இலவசமாக உலகக்கோப்பை 

Vivo ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஓணம் சலுகைகளின் கீழ், 2022 உலகக் கோப்பைக்கான இலவச டிக்கெட்டுகளை வெல்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம். மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கால்பந்து போட்டிகளை நேரில் காணும் இலவச டிக்கெட் கிடைக்கும். அதிர்ஷ்டஷாலிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலருக்கு கால்பந்து உலகக்கோப்பையை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால், கேரள ரசிகர்கள் விவோ மொபைலை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். 

மேலும் படிக்க | Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News