Free 4G Jiophone: இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 'ஜியோ போன்' இலவசம்

Free JioPhone Offer: ஜியோ இரண்டு வகையான "காம்போ ரீசார்ஜ் திட்டங்களைக்" கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,999 மற்றும் ரூ.1,499 ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் "ஜியோ போன் இலவசமாக" (JioPhone Free) கிடைக்கும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 20, 2022, 03:46 PM IST
  • "ஜியோ போன்" (JioPhone) பயனர்களுக்கு என்று தனி ரீசார்ஜ் திட்டம்.
  • ஜியோ இரண்டு வகையான "காம்போ ரீசார்ஜ் திட்டங்களைக்" கொண்டுள்ளது.
  • இரண்டு திட்டங்களுடனும் ஜியோ போன் இலவசமாக வழங்கப்படுகிறது
Free 4G Jiophone: இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 'ஜியோ போன்' இலவசம்  title=

Free JioPhone Offer: இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு சாதனம் மொபைல் போன். நமது வாழ்வின் ஒரு அங்கமாக மொபைல் போன்கள் இருந்து வருகிறது. மார்க்கெட்டில் பல விதமான மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அனைவராலும் விரும்பிய போன்களை வாங்க முடிகிறதா? என்றால், இல்லை.. சிலரால் மட்டுமே விரும்பிய போன்களை வாங்க முடிகிறது. ஒரு சிலரால் அதிக அளவில் பணம் செலவழித்து மொபைல் போன்களை வாங்க முடிவதில்லை. 

அவர்களுக்கென்று, அதாவது அதிக பணம் செலவழிக்க முடியாதவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ "ஜியோ போனை" (JioPhone) அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ஜியோ நிறுவனம் "ஜியோ போன்" (JioPhone) பயனர்களுக்கு என்று தனி ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. அதாவது முதல் முறையாக ஜியோ போனை வாங்கும் அல்லது இரண்டாம் நிலை ஜியோ போனை விரும்பும் பயனர்களுக்கு, ஜியோ நிறுவனம் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. 

ஜியோ போன் இலவசமாக கிடைக்கும்:
அதற்காக ஜியோ இரண்டு வகையான "காம்போ ரீசார்ஜ் திட்டங்களைக்" கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,999 மற்றும் ரூ.1,499 ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் "ஜியோ போன் இலவசமாக" (JioPhone Free) கிடைக்கும். வாருங்கள் அந்த திட்டத்தைப் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்துக்கொள்ளுவோம். 

மேலும் படிக்க: பழசுக்கு புதுசு..! ஜியோவின் ஸ்மார்ட்போன் சூப்பர் ஆஃபர்

1,499 ரூபாய் ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டம்:
ஜியோ ரூ. 1,499 காம்போ ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு 1 வருட இலவச சேவைகளுடன் கூடுதலாக ஜியோஃபோன் வழங்கப்படுகிறது. ஜியோவின் இந்த திட்டத்திற்காக, நீங்கள் ரூ.1,499 செலவழிக்க வேண்டும். இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்கும். அதாவது, நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் பணம் செலவழிக்காமல் STD மற்றும் ரோமிங் அழைப்புகளைச் செய்யலாம். இது தவிர, ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 24 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, Jio Apps சந்தாவும் 1 வருடத்திற்கு கிடைக்கும்.

1,999 ரூபாய் ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டம்:
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2 ஆண்டுகள். இதில், பயனர்களுக்கு எந்த எண்ணுக்கும் வரம்பற்ற அழைப்பு வசதி வழங்கப்படுகிறது. இதனுடன், 48 ஜிபி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் உங்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் வழங்கப்படும். இந்த இரண்டு திட்டங்களுடனும் ஜியோ போன் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ தொலைபேசி விவரக்குறிப்புகள்:
ஜியோ போனில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் SD கார்டு ஸ்லாட்டுக்கான ஆதரவு உள்ளது, இதன் மூலம் 128 ஜிபி வரை சேமிக்ககலாம். சிறிய வடிவமைப்பு JioFan 1500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 9 மணிநேர "டாக் டைம்" வழங்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. JioPhone இல் ஹெட்ஃபோன் ஜாக் ஆதரவு உள்ளது. அதாவது 3.5mm ஆடியோ ஜாக் கிடைக்கிறது. தொலைபேசியில் 0.3 எம்பி முன் மற்றும் பின்புற கேமரா உள்ளது. 

மேலும் படிக்க: Cheapest Recharge Plan: அசத்தல் திட்டம்; ரூ.141 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News