அதிகரிக்கும் 'Zero Click' ஹேக்கிங் - தப்பிக்க வழி உண்டா?

ஜீரோ கிளிக் ஹேக்கிங் என்பது நீங்கள் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்யாவிட்டாலும், தானாகவே ஹேக்கர்களால் உங்கள் மொபைலுக்கு நுழைய முடியும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 20, 2022, 07:34 PM IST
  • உலகம் முழுவதும் அதிகரிக்கும் ஜீரோ கிளிக் ஹேக்கிங்
  • பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் முதல் குறி
  • ஜீரோ கிளிக் ஹேக்கிங்கில் தப்பிக்க வழி உண்டா?
அதிகரிக்கும் 'Zero Click' ஹேக்கிங் - தப்பிக்க வழி உண்டா? title=

அரபு செய்தியாளரான ரானியா டிரிடி ஜீரோ கிளிக் ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்டு, பொதுவெளியில் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, " சந்தேகத்திற்கிடமான லிங்குகள், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வந்தது. அவை மீது சந்தேகம் இருந்ததால், அந்த லிங்குகளை நான் கிளிக் செய்யவில்லை. இருப்பினும் என்னுடைய மொபைல் ஹேக்கர்களின் பிடியில் சிக்கியது. 

மேலும் படிக்க | Password-ஐ ஹேக் செய்ய சில நொடிகள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!

முன்பெல்லாம் மொபைலுக்கு வரும் ஏதாவதொரு லிங்கை கிளிக் செய்யும்போது ஹேக்கர்கள் நம் மொபைலுக்குள் ஊடுருவுவார்கள். ஆனால், நீங்கள் எந்தவொரு லிங்கை கிளிக் செய்யாவிட்டாலும், அவர்களால் உங்கள் மொபைலுக்குள் நுழைய முடியும். இது எப்படி சாத்தியம்? என நீங்கள் நினைக்கலாம். Apple Inc மற்றும் ஆன்டிராய்டு iOS, Google போன்ற இயக்க முறைமைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர்.

நீங்கள் ஹேக்கர்கள் பிடியில் இருக்கிறீர்கள் என்பதே உங்களுக்கு தெரியாது. அவர்களால் உங்கள் அழைப்புகளை ரெக்கார்டு செய்ய முடியும். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற லொகேஷனை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்வது முதல் அனைத்தையும் ஹேக்கர்களால் இருக்கும் இடத்தில் இருந்தே செய்ய முடியும். 

குறுஞ்செய்தி, லிங்குகள் ஆகியவற்றில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதால் ஜீரோ கிளிக் ஹேக்கிங் உலகளவில் பிரபலமாகி வருகிறது. பெரும்பாலும் அரசு நிறுவனங்கள், உளவு அமைப்புகளால் இந்த ஜீரோ ஹேக்கிங் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை தயாரித்து விற்பனை செய்வதில் பல நிறுவனங்கள் இருந்தாலும், அவற்றில் முன்னணியில் இருப்பது இஸ்ரேலின் NSO குழுமம். இந்த நிறுவனத்தை தவிர, Paragon, Candiru மற்றும் Cognyte Software Ltd ஆகிய நிறுவனங்களும் ஜீரோ கிளிக் ஹேக்கிங் கருவிகளை உருவாக்கியுள்ளன.

முழுமையாக ஜீரோ கிளிக் ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க முடியாவிட்டாலும், கண்காணிப்பு உங்களால் குறைக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அடிக்கடி உங்கள் மொபைலை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, தகவல் தொடர்ப்பு பயன்படுத்தும் செயலிகளை நீக்கிவிட வேண்டும். இந்த செயலிகள் உங்களிடம் இருந்தால், ஜீரோ கிளிக் ஹேக்கிங்கில் சிக்குவது எளிது. மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசாங்க விமர்சகர்கள் ஆகியோர் ஜீரோ கிளிக் ஹேக்கிங்கில் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். பெகாசஸ் உளவு செயலி இந்தியாவில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. அந்த செயலியை உருவாக்கியதும் இஸ்ரேலின் NSO குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆன்லைன் ஹேக்கிங்கிலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News