ஆன்லைன் ஹேக்கிங்கிலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க!

Haveibeenpwned.com எனும் வலைதளத்தின் கணிப்புப்படி கடந்த 2021-ம் ஆண்டில் 4,41,000 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 02:39 PM IST
  • தற்போது பலருக்கும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் சூழலும் உருவாகிவிட்டது.
  • google மற்றும் microsoft மூலம் தரவுகளை சேமித்து வைத்திருக்கும் நாம், நினைவில் வைத்துக்கொள்ள தவறி விடுகிறோம்.
ஆன்லைன் ஹேக்கிங்கிலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க! title=

இந்த இக்கட்டான நோய்த்தொற்று பரவல் காலமானது நம்மை இணையத்திற்குள்ளேயே முடக்கிவிட்டது.  தற்போது பலருக்கும் வீட்டிலிருந்தபடியே வேலை (Work from home) செய்யும் சூழலும் உருவாகிவிட்டது.  உலகில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கியுள்ளனர்.  மேலும் பலர் வீட்டிலிருந்தபடியே  ஆன்லைனில் ஷாப்பிங் செய்து கொள்கின்றனர்.  ஷாப்பிங் முதல் பண பரிவர்த்தனை வரை அனைத்தும் ஆன்லைனிலேயே மக்கள் செய்ய தொடங்கிவிட்டனர்.  இதனால் நன்மைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகளவில் இதுவரை இல்லாத அளவிற்கு சைபர் குற்றங்கள் பதிவாகி வருகிறது.  குற்றவாளிகள் நம்மளது தரவுகளை திருடி அவர்களின் நலனுக்காக அதனை பயன்படுத்தி கொள்வது தொடர்கதையான ஒன்றாக மாறி வருகிறது.  இதில் அச்சுறுத்தும் விஷயம் என்னவென்றால் நம்முடைய password மற்றும் கிரெடிட் கார்டு நம்பர்களை குற்றவாளிகள் ஹேக் செய்து நமக்கெதிராக பயன்படுத்தி விடுகின்றனர்.

ALSO READ | 10 லட்சம் கார்களை விற்பனை செய்து டெஸ்லா சாதனை!

google மற்றும் microsoft மூலம் தரவுகளை சேமித்து வைத்திருக்கும் நாம், நினைவில் வைத்துக்கொள்ள தவறி விடுகிறோம்.  ஹேக் செய்யப்படும் கணக்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும் வலைத்தளமான Haveibeenpwned.com ஒரு அதிர்ச்சியான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.  அதாவது கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 441,000 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.  மேலும் உங்கள் தரவுகள், கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய நீங்க Haveibeenpwned.com இந்த தளத்தை பார்வையிடலாம்.  இந்த வலைத்தளம் தொடர்ந்து ஹேக் செய்யப்படும் கணக்குகளை கண்காணித்து வருகிறது.  இந்த தளத்தில் நீங்கள் சோதனை செய்யும்போது உங்களது e-mail முகவரியை RedLine பயன்படுதியாக காமித்தால், நீங்கள் உடனடியாக VPN மற்றும் அனைத்திலும் உள்ள உங்களது கணக்குகளின் password ஐ மாற்றிக்கொள்ள வேண்டும்.

hacking

இவ்வாறு செய்வதால் அடுத்தமுறை நீங்கள் வெப்சைட்டில் அல்லது கணினியில் உள்நுழையும்போது உங்களது  e-mail முகவரி, password மற்றும் இதர தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.  மேலும் ஆன்லைனில் முக்கியமான வேலைகளை நீங்கள் செய்யவேண்டியது இருந்தால் நீங்கள் incognito mode-ல் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இவ்வாறு தகவல்களை திருடும் RedLine malware 2020ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இது பல பயனர்களின் கணக்குகள், password மற்றும் தரவுகளை ஹேக் செய்து திருடிவிடுகிறது.

ALSO READ | OnePlus 10 Pro டீசர் இணையத்தில் கசிந்துள்ளது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News