மலிவு விலையில் ஜியோ கொடுக்கும் திட்டங்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஜியோ நிறுவனம் அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா மற்றும் ஓடிடி திட்டங்களை கொடுக்கிறது.
மேலும் படிக்க | மின்சார கார் வாங்கும் எண்ணம் இருக்கா? இந்த வங்கிகளில் சிறப்பு கடன்கள் சலுகைகள் உள்ளன
வோடாஃபோன் - ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ இதுபோன்ற மலிவு விலை டேட்டா பிளான்களை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், டெலிகாம் மார்கெட்டில் கோலோச்சுவதற்காகவும் ஜியோ கொடுக்கும் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஐபிஎல் நடைபெற்று கொண்டிருக்கும்போது, இத்தகைய மலிவு விலையில் கிடைக்கும் டேட்டா திட்டங்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
ரூ.75க்கு கிடைக்கும் சலுகைகள்
ஜியோ நிறுவனத்தின் 75 ரூபாய் திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 100எம்பி டேட்டா மற்றும் 200எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 2.5 ஜிபி இணையம் வழங்கப்படும். இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்குகளுக்கும் 50 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அம்சம் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா சப்ஸ்கிரிப்சனும் கிடைக்கும்.
ரூ.91 பிளான் பலன்கள்
ஜியோவின் 91 ரூபாய் திட்டத்தில் நீங்கள் தினமும் 100எம்பி இணையம் மற்றும் 200எம்பி கூடுதல் டேட்டாவைப் பெறுவீர்கள். 28 நாட்கள் வேலிடிட்டி. இந்த திட்டத்தில், உங்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தில் அனைத்து நெட்வொர்குகளுக்கும் 50 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளின் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.
மேலும் படிக்க | பிளிப்கார்டில் அதிரடி சலுகை: Redmi Note 10G போனின் விலை வெறும் ரூ. 1500
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR