JioCinema: நமக்கு இலவசம் தான்.. ஆனாலும் ஜியோ சினிமாவிற்கு வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

JioCinema: ஐபிஎல் 2023 போட்டியை கேபிள்/டிடிஹெச் இணைக்கப்பட்ட டிவியில் பார்ப்பதை விட ஜியோ சினிமா இணைக்கப்பட்ட மொபைல்/டிவிகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 06:37 AM IST
  • 27% பார்வையாளர்கள் மட்டுமே கேபிள்/டிடிஹெச் வழியாக ஐபிஎல் போட்டியை பார்க்கிறார்கள்.
  • 73% பார்வையாளர்கள் ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டியை பார்க்கிறார்கள்.
  • டிவியில் விளம்பரதாரர்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
JioCinema: நமக்கு இலவசம் தான்.. ஆனாலும் ஜியோ சினிமாவிற்கு வருமானம் எப்படி வருகிறது தெரியுமா? title=

JioCinema: மொபைல் மற்றும் டிவியில் ஜியோ சினிமா பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டியை ஏரளாமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.  அதாவது டிவியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் போட்டியை விட மூன்று மடங்கு அதிகமான ஐபிஎல் பார்வையாளர்களை டிஜிட்டல் தளமான ஜியோ அடைந்துள்ளது.  டிவி சேனலை விட டிஜிட்டல் தளத்தில் ஐபிஎல் போட்டியை ரசித்து பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐபிஎல் விளம்பர செயல்திறன் அளவீட்டு அறிக்கையான சின்க்ரோனைஸ் இந்தியா மற்றும் யூனோமர் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையின்படி, டிஜிட்டல் தளங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும் ஐபிஎல் போட்டியையே 73% பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கிறார்கள் மற்றும் 27% பார்வையாளர்கள் மட்டுமே கேபிள்/டிடிஹெச் வழியாக ஐபிஎல் போட்டியை பார்க்கிறார்கள். கேபிள் அல்லது டிடிஹெச் மூலம் பார்ப்பதை விட அதிகமான பார்வையாளர்கள் ஸ்மார்ட் டிவிகளில் ஐபிஎல்லை ஸ்ட்ரீம் செய்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | வெறும் ரூ.15,000க்குள் கிடைக்கக்கூடிய அசத்தலான ஸ்மார்ட்போன்கள்!

ஜியோ சினிமா இணைக்கப்பட்ட டிவியில் 62% பார்வையாளர்கள் மற்றும் கேபிள்/டிடிஹெச் மூலம் 38% பார்வையாளர்கள், டிவியில் ஐபிஎல் பார்த்து வருகின்றனர்.  கேபிள் இணைக்கப்பட்ட டிவி மூலம் போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிக்கை காட்டுகிறது.  18% பேர் டிவியில் மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள், சுருக்கமாக சொல்லப்போனால் மூன்றில் ஒரு பங்கு பார்வையாளர்கள் ஐபிஎல்லை பிரத்தியேகமாக கேபிள்/டிடிஹெச் இணைக்கப்பட்ட டிவியில் பார்க்க ஆசைப்படுகின்றனர். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜியோ சினிமா இணைக்கப்பட்ட மொபைல் மற்றும் டிவியில் பார்க்கவே விரும்புகின்றனர்.

சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனமான சின்க்ரோனைஸ் இந்தியா மற்றும் முன்னணி டிஜிட்டல் நுகர்வோர் நுண்ணறிவு தளமான யூனோமர் இணைந்து, டாடா ஐபிஎல் 2023 இன் போது பிராண்டுகளின் விளம்பரம் மற்றும் ஸ்பான்சரிங் செய்வதற்கான விளம்பர செயல்திறன் அளவீட்டு தீர்வை 'ஸ்கோர்' கொண்டு வருகிறது.  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொலைக்காட்சியில் விளம்பரதாரர்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.  சமீபத்திய BARC தரவுகளின்படி, இந்த சீசனின் முதல் 19 போட்டிகளில் டிவியில் விளம்பரதாரர்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் டிவியில் 35 விளம்பரதாரர்களை மட்டுமே ஈர்த்துள்ளது, கடந்த சீசனில் இந்த எண்ணிக்கை 72 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  மறுபுறம், ஐபிஎல்லின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கின் போது ஜியோ சினிமா 23 ஸ்பான்சர்களுடன் மற்றும் விளம்பரதாரர்களின் எண்ணிக்கையை  சாதனை படைத்துள்ளது.

ஜியோ சினிமா அதன் பயனர்களுக்கு இலவசமாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பி பிரபலமானது, நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியை இந்த இயங்குதளம் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.  ஜியோ சினிமா இயங்குதளம் அதன் பயனர்களுக்கு இலவசமாக பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்த நிலையில் தற்போது சில மாற்றங்களை செய்யவிருக்கிறது.  நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற மற்ற ஓடிடி தளங்களுக்கு போட்டியாக ஜியோ நிறுவனம் போட்டியிட முடிவெடுத்து இருப்பதால், இந்த தளமும் விரைவில் மற்ற தளங்களை போலவே அதன் பயனர்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் 100க்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஜியோ சினிமா அதன் பயனர்களுக்கு வழங்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Second Hand வாகனம் வாங்கும் போது இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News