Jio Gigafiber Launch: சலுகை மற்றும் திட்டங்களை குறித்து அறிந்து கொள்க -முழுவிவரம்

ஜியோ கிகாஃபைபர் திட்டம் இன்று வெளியிடப்பட்டது. அதன் பலன்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துக்கொள்ளுவோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 5, 2019, 07:57 PM IST
Jio Gigafiber Launch: சலுகை மற்றும் திட்டங்களை குறித்து அறிந்து கொள்க -முழுவிவரம் title=

புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கிகா ஃபைபர் இன்று (வியாழக்கிழமை) செயல்பாட்டு வந்தது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி, ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை சுமார் 1600 நகரங்களில் வழங்குகிறது. ஜியோ கிகாஃபைபர் சந்தா திட்டங்கள் குறைந்தப்பட்சம் ரூ.699 முதல் ரூ.8,499 வரை உள்ளன. ரூ.699 ஆரம்ப திட்டத்தில் 100 Mbps வேகம் கிடைக்கும். அதே நேரத்தில், ரூ.8,499 திட்டத்தில் 1gbps வரை வேகம் பெறுவார்கள். மேலும் அறிமுக சலுகையாக ஹெச்.டி தொலைக்காட்சி மற்றும் தங்கம் போன்றவை திட்டங்களுக்கு ஏற்ப இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.

அல்ட்ரா-அதிவேக பிராட்பேண்ட் (1 ஜிபிபிஎஸ் வரை), இலவச உள்நாட்டு மற்றும் சர்வதேச அழைப்பு மற்றும் டிவி வீடியோ அழைப்பு மற்றும் கான்பிரன்ஸ் அழைப்பு உட்பட 9 சேவையை வழங்க உள்ளது.

ரூ.699 திட்டத்தில் என்ன பலன் கிடைக்கும்:
ஜியோவின் ஆரம்ப திட்டம் வெண்கலம் (Bronze) என்று அழைக்கப்படுகிறது. இதில், பயனர்கள் 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம் பெறுவார்கள். இந்த திட்டத்தில், பயனாளர்கள் வரம்பற்ற தரவைப் பெறுவார்கள் (100 ஜிபி + 50 ஜிபி கூடுதல்). இந்த திட்டத்தில், இலவச குரல் அழைப்பின் பலனைப் பெறுவார்கள். 

ரூ.849 திட்டத்தில் என்ன பலன் கிடைக்கும்:
ரூ.849 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம் கிடைக்கும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு (200 ஜிபி + 200 ஜிபி கூடுதல்) கிடைக்கும். இலவச குரல் அழைப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனாளர்கள் இந்தியாவில் உள்ள எந்த எண்ணையும் தொடர்ப்புக் கொண்டு இலவசமாக பேச முடியும்.

ரூ.1,299 திட்டத்தில் டிவி இலவசமாக கிடைக்கும்:
ஜியோவின் ரூ.1,299 திட்டம் கோல்ட் (Gold) என்று அழைக்கப்படுகிறது. இதில் 250 எம்.பி.பி.எஸ் வேகத்தைப் பெறுவார்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற (500 ஜிபி + 250 ஜிபி கூடுதல்) தரவு கிடைக்கும். இந்த திட்டத்தில் இலவச குரல் அழைப்பை பயனாளர்கள் பெறுவார்கள். இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு 4 கே ஸ்மார்ட் தொலைக்காட்சியும் கிடைக்கும்.

இன்னும் சில திட்டங்கள்: 
கோல்ட் திட்டத்தை அடுத்து டைமன்ட் (Diamond) திட்டம் உள்ளது. இதன் மாத வாடகை ரூ.2,499. அதற்கு அடுத்து பிளாட்டினம் திட்டம். அதன் மாத வாடகை 3,999 ரூபாய். மிகவும் விலையுயர்ந்த திட்டம் டைட்டானியம் ஆகும். இந்த திட்டத்தின் மாத வாடகை 8,999 ரூபாய். இந்த அனைத்து திட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு 4 கே ஸ்மார்ட் தொலைக்காட்சி கிடைக்கும்.

Trending News