365 நாளும் Hotstar இலவசம் - நாள்ளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கும் Jio பிளான்

365 நாளும் ஹாட்ஸ்டார் இலவசமாக கண்டுகளிக்க ஜியோ கொடுக்கும் பெஸ்ட் பிளானைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2022, 01:14 PM IST
  • ஆண்டு முழுவதும் இலவச ஹாட்ஸ்டார் பிளான்
  • ஜியோவின் பலே திட்டத்தால் வாடிக்கையாளர்கள் ஈர்ப்பு
  • மாதம் ரூ.249 மட்டும் செலவு செய்தால் போதும்
365 நாளும் Hotstar இலவசம் - நாள்ளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கும் Jio பிளான் title=

ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் ஜியோ அசத்தலான பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2.5 ஜிபி டேட்டாவுடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிளானை ஆண்டு முழுவதும் இலவசமாக கொடுக்கும் இந்த பிளானைப் பற்றி தெரிந்து கொள்வோம். மாதத்துக்கு 249 ரூபாய் செலுத்தினால் மட்டும்போதும். 

மேலும் படிக்க | சூப்பர் ஏர்டெல் பிளாக் பிளான்! ரூ.1099 திட்டத்தை அறிமுகப்படுத்தியது Airtel

ஜியோவின் பிளான் என்ன? 

ஜியோவின் 2,999 ரூபாய் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் பெற முடியும். இந்த பிளானில் இலவச ஓடிடி அம்சமும் கிடைக்கும். ஆண்டு முழுவதும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரை பார்த்து ரசிக்கலாம். வேலிடிட்டி ஒரு  ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும். 

மேலும் படிக்க | வெறும் ரூ.821-க்கு அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் சேல் அதிரடி

ரூ.8.33 மட்டுமே செலவு

2,999 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்யப்படும் இந்த திட்டத்தை மாத அடிப்படையில் எடுத்துக் கொண்டால் 249 ரூபாய் மட்டுமே நீங்கள் செலவிடுவீர்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 8.33 ரூபாய் கட்டணமாக செலுத்தப்படுகிறது. ஒரு நாள் அன்லிமிட்டெட் அழைப்புகளுக்கு மற்றும் 2.5 ஜிபி டேட்டாவுக்கும் சேர்த்து இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்திகிறார்கள். இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்தை சேமிக்கவும் முடியும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News