கிரீன் ஹைட்ரஜனில் இயங்கும் நிதின் கட்கரியின் புதிய கார்! அசத்தலான சிறப்பம்சங்கள்

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்திற்கு, தன்னுடைய கிரீன் ஹைட்ரஜனில் இயங்கும் ஒரு புதிய காரில் வந்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2022, 04:52 PM IST
  • ஒரு முறை கிரீன் ஹைட்ரோஜன் டேங்க் புல் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை செல்லுமாம்.
  • 5 பேர் வரை பயணம் செய்ய முடியும்.
  • இந்தியாவில் இந்த ஆண்டு மின்சார வாகனங்கள் விற்பனையில் ஒட்டுமொத்தமாக 162 சதவீத வளர்ச்சி.
கிரீன் ஹைட்ரஜனில் இயங்கும் நிதின் கட்கரியின் புதிய கார்! அசத்தலான சிறப்பம்சங்கள் title=

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த காரின் பெயர் டொயோட்டா மிராய் (Toyota Mirai).

இந்த காரானது ஹைட்ரஜன் ஃபியூயல் செல் பயன்பாட்டில் இயங்க கூடியது. 

அதாவது கேஸ் பயன்பாட்டில் ஆட்டோக்கள் ஓடுவதுபோல், இந்த வகை கார்களில் உள்ள டேங்கில் கிரீன் ஹைட்ரஜன் (Green Hydrogen ) நிரப்பப்படும். 

Toyota Mirai

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி மூலம் கிரீன் ஹைட்ரஜன் மின்சாரமாக மாற்றப்பட்டு, காரின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும். 

இந்த கிரீன் ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் வாகனத்திலிருந்து கார்பன் வெளியேறுவதற்கு மாறாக நீராவியும் சூடான காற்றுமே வெளியேறுமாம்.

இந்த காரில் பிரேக் பிடித்தால் கூட, அதனால் உண்டாகும் பிரஷர் பேட்டரியில் மின்சாரமாக சேமிக்கப்படுமாம். இந்த காரை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்து, அங்கு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடதக்கது.இந்த காரில் 5 பேர் வரை பயணம் செய்ய முடியுமாம்.

Toyota Mirai

மேலும் படிக்க | இனி ரயில் பயணத்தில் இந்த தொல்லைகள் இருக்காது! 

அமெரிக்காவில் இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 50 லட்சம் ரூபாய். இந்தியாவில் இறக்குமதி வரி மட்டும் 100 சதவிதம் வரை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காரின் விலையோடு சேர்த்து, இறக்குமதி வரி, கூடுதல் வரி என குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் ஆகிவிடும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த காரில், ஒரு முறை கிரீன் ஹைட்ரோஜன் டேங்க் புல் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை செல்லுமாம்.

இந்தியாவில் தற்போது ஒரு கிலோ கிரீன் ஹைட்ரஜனின் விலை 500 ரூபாயாக இருக்கிறது.

Toyota Mirai

மேலும் பிரதமர் மோடியின் இந்தியாவை மிகப்பெரிய ஹைட்ரஜன் தயாரிக்கும் நாடாக மாற்ற வேண்டும் என்ற எதிர்கால திட்டம் நிஜமானால், இதன் விலை ஒரு கிலோவிற்கு 160 ரூபாய் என்ற நிலைக்குவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள டொயோட்டா ஆலையில் தயாரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது சிறப்பம்சமாகும். 

ஏற்கனவே இந்தியாவில் இந்த ஆண்டு மின்சார வாகனங்கள் விற்பனையில் ஒட்டுமொத்தமாக 162 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்திருந்தார். 

இந்த நிலை, பெட்ரோல் டீசல் இறக்குமதியை குறைத்து இந்தியாவிற்கு எரிபொருள் சுயசார்புதன்மை தரும் என்ற நம்பிக்கையை அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த காரில் ஊர்வலம் வந்துக்கொண்டிருக்கிறாராம்.

Toyota Mirai

மேலும் படிக்க | April 1, 2022: இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய வரி விதிப்பு மாற்றங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News