பிரபல சமூக ஊடக நிறுவனம் பேஸ்புக், தனது பெயரை மாற்றியுள்ளது. இதை, தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார். நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் அறிவித்தார்.
மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாக தெரிவித்த மார்க் ஜூக்கர்பெர்க், அதனை பிரதிபலிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு முன்னதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பேஸ்புக், மெட்டா என்ற புதிய பெயரைப் பெற்றுள்ளது.
இது குறித்து, பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேசியபோது, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பெயர் மாற்றத்தை அறிவித்தார்.
Announcing @Meta — the Facebook company’s new name. Meta is helping to build the metaverse, a place where we’ll play and connect in 3D. Welcome to the next chapter of social connection. pic.twitter.com/ywSJPLsCoD
— Meta (@Meta) October 28, 2021
அவரது உரையின் சாரம்சம்: ”சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான 'பேஸ்புக்'கின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் “மெட்டா” என்று பெயர் பெறுகிறது பேஸ்புக்”.
”சமூக பிரச்னைகளுடன் போராடி நாம் நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது”.
“ஆன்லா, நிறுவனத்தின் செயலிகள் மற்றும் அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை” என்று மார்க் தெரிவித்தார்.
பேஸ்புக்கின் பெயர் மாற்றத்திற்கு காரணமான மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? என்பது தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் விவாதங்கள் களை கட்டீஉள்ளன. மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் உலகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்றாலும், மக்களை மேலும் அதிகமாக ஆன்லைனில் இருக்க வைக்குக்ம் உத்தி என்றும் நம்பப்படுகிறது.
மெட்டாவர்ஸ் என்பது சமூக இணைப்பின் அடுத்த பரிணாமம். இது உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவருக்குமான கூட்டுத் திட்டமாகும். இன்று சாத்தியமாக இருப்பதையும் தாண்டி, மேலும் மக்கள் இணக்கமாக பழகவும், கற்றுக்கொள்ளவும், ஒத்துழைக்கவும் விளையாடவும் முடியும் என்று கூறப்படுகிறது.
Also Read | பேஸ்புக் அடுத்த மாஸ் அறிவிப்பு; வாட்ஸ்அப் இல் புதிய அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR