மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஜினில் தண்ணீர் தேங்குதல் அல்லது என்ஜின் செயலிழப்பு அல்லது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்-டீசல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை குறைந்த விலையில் சரிசெய்து கொடுக்கும் ஆஃபரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ’தப்பித்த இளைஞர்கள்’ நடுரோட்டில் தீப்பிடித்த காஸ்டிலி கார் - Viral Video
அதன்படி, ஹைட்ரோஸ்டேடிக் லாக் அதாவது இன்ஜினுக்குள் தண்ணீர் நுழைவதால் அல்லது கலப்பட எரிபொருளைப் பயன்படுத்துவதால் என்ஜின் நிறுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இதற்கான சிறப்பு திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான மாருதி சுஸுகி, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும்நோக்கில் இந்த ஆஃபரைக் கொண்டு வந்துள்ளது. கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த பேக்கேஜ் பெரும் வசதியாக இருக்கும்.
கார் மார்க்கெட்டில் இழந்த மார்க்கெட்டை பிடிக்கவும், சந்தையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், மாருதி சுசூகி நிறுவனம் களமிறங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் நோக்கில் சிறந்த சர்வீஸ்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதன் ஒருபகுதியாக மார்ச் 31 ஆம் தேதி வரை வெறும் 500 ரூபாய் செலவில் கார்களில் இருக்கும் பிரச்சனையை நீங்கள் சரிசெய்துகொள்ள முடியும். ஆஃபரை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
மேலும் படிக்க | பழுதடைந்த SUV-ஐ மாற்றிக் கொடுத்த Ecstatic XUV700 மஹிந்திரா
மாருதி நிர்வாக இயக்குநர்
வழக்கமான நாட்களில் மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டியிருக்கும் சர்வீஸ்களை வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொள்ள முடியும். மாருதி சுஸுகியின் சர்வீஸ் பிரிவு மூத்த நிர்வாக இயக்குனர் பார்த்தோ பானர்ஜி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக அதிக நெரிசல் மற்றும் கலப்பட எரிபொருளால் கார்களின் இன்ஜின் பழுதடையும் சம்பவங்கள் பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளை சரிசெய்யும் வகையில் குறைந்த செலவில் வாடிக்கையாளர்களுக்கான ஆஃபரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, வேகன்ஆர், ஆல்டோ போன்ற கார்களின் இன்ஜின் பழுதுபார்க்க, வாடிக்கையாளர்கள் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும்" எனத் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR