நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பார்க்க வேண்டுமா... ஜியோ, ஏர்டெலின் பம்பர் திட்டங்கள்

Free Netflix: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நெட்வோர்க் வழங்கும் சில போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் நெட்பிளிக்ஸ் தளத்தை இலவசமாகவே பார்க்கலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 24, 2023, 10:46 AM IST
  • மொபைலுக்கு ரீசார்ஜ் செய்தே நெட்ஃபிளிக்ஸ் தளத்தை பார்க்கலாம்.
  • இப்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டை பகிர முடியாது.
  • Netflix Household-இல் மட்டுமே ஒரு கணக்கில் பலரும் பார்க்கலாம்.
நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பார்க்க வேண்டுமா... ஜியோ, ஏர்டெலின் பம்பர் திட்டங்கள் title=

Free Netflix: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு பயனர் அவர் நெட்ஃபிளிக்ஸ் கணக்கின் கடவுச்சொல்லை பகிர்ந்துகொள்ளும் வசதியை நிறுத்தியது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் புதிய கொள்கையின்படி, Netflix Household இப்போது பயனர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்களுடன் நெட்ஃபிளிக்ஸ் கணக்குகளைப் பகிர மட்டுமே அனுமதிக்கிறது. 

இதன் பொருள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தை தொடர்ந்து பார்ப்பதற்கான ஒரே வழி உங்கள் சொந்த திட்டத்தை வாங்குவதுதான். இருப்பினும், இந்த விருப்பம் அனைவருக்கும் மலிவாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக மாதாந்திரம் உள்ள பிற செலவுகளான, WiFi மற்றும் மொபைலுக்கான ரீசார்ஜ் திட்டங்களை வைத்து கொண்டு, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி சந்தாவின் கூடுதல் செலவு பலருக்கு நிதிச்சுமையாக இருக்கலாம்.

இருப்பினும், OTT சேனல்களுக்கு செலவு செய்வதில் இருந்து பயனர்களைக் காப்பாற்ற, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவை அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை நெட்ஃபிளிக்ஸ்க்கான இலவச சந்தாக்களுடன் இணைக்கின்றன. வரம்பற்ற அழைப்பு, டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் நன்மைகளுடன், பயனர்கள் தனி மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் செலவு செய்யாமல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும்.

மேலும் படிக்க | கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை..ஓடிடியில் இன்று வெளியான படங்களின் லிஸ்ட்!

எனவே, நீங்கள் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாக்களுடன் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகிறீர்களானால், இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாக்களுடன் கூடிய ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களின் பட்டியலை இங்கு காணலாம். 

ஏர்டெல் திட்டங்கள்

ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்தத் திட்டமானது 200ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் (Basic திட்டம்), அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த திட்டம் 150ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் (Basic), அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ரூ. 1,499 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த திட்டமானது 300ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவற்றின் இலவச சந்தாக்களை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் சர்வதேச ரோமிங் நன்மைகளும் இதில் அடங்கும். இருப்பினும், கூடுதல் சிம் கார்டுகளுடன் கூடிய குடும்பத் திட்டம் இதில் இல்லை.

ஜியோ ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம்
 
ஜியோ திட்டம் தாராளமாக 100ஜிபி டேட்டாவை மாதத்திற்கு வழங்குகிறது, மேலும் 3 குடும்ப சிம்கள் வரை ஒவ்வொன்றிற்கும் கூடுதலாக 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். கூடுதலாக, இந்த திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாக்கள் அடங்கும். மற்ற ஜியோ திட்டங்களைப் போலவே, பயனர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெறுகிறார்கள்.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ. 1,499 ப்ரீபெய்ட் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் Netflix Basicக்கான இலவச சந்தா (மாதம் ரூ. 199 மதிப்பு) ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ வெல்கம் ஆஃபரும் உள்ளது, இது பயனர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவை அணுகும். 

ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ. 1,099 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி, 2ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் Netflix மொபைலுக்கான இலவச சந்தா (மாதம் ரூ. 149 மதிப்பு) வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ வெல்கம் ஆஃபரும் உள்ளது, இது பயனர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவை அணுகும்.

மேலும் படிக்க | பீட்ஸா 3 to பேபி..ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News