ரிலையன்ஸ் ஜியோ திங்களன்று புதிய “All-in-One” திட்டங்களை அதிக தரவு மற்றும் அழைப்பு நன்மைகளுடன் அறிமுகப்படுத்தியது.
வேறு நெட்வொர்க் அழைப்புகளுக்கு கட்டணம் வசூளிக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ முன்னதாக அறிவித்த நிலையில், பல வாடிக்கையாளர்களை இழக்கும் நிலைக்கு சென்றது ஜியோ. இந்நிலையில் இந்நிறுவனம் ரூ .222 முதல் மூன்று புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி வாடிக்கையாளர்களை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ புதிய தரவுத் திட்டங்களின் முழு விவரங்களையும் பார்ப்போம்.
ரூ.222 மாதாந்திர திட்டத்துடன், ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ - ஜியோ நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பு அளிக்கின்றது. அதேவேளையில் ஜியோ அல்லாத நெட்வொர்க்கிற்கு, FUP 1,000 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்குகிறது.
ரூ.333 திட்டத்துடன், ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ - ஜியோ நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பு அளிக்கின்றது. அதேவேளையில் ஜியோ அல்லாத நெட்வொர்க்கிற்கு, FUP 1,000 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்குகிறது., ஆனால் இரண்டு மாதங்களுக்கு இத்திட்டம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது திட்டம் ரூ. 444 ரிலையன்ஸ் ஜியோ திட்டம் அதே 2 ஜிபி தினசரி தரவு மற்றும் வரம்பற்ற ஜியோ முதல் ஜியோ அழைப்பு வரை மூன்று மாத செல்லுபடியை வழங்குகிறது. ஜியோ அறிக்கை படி, அடிப்படை திட்டத்திற்கு மேல் ஒவ்வொரு ரூ .111 கூடுதல் கட்டணத்திற்கும் 1 மாத கூடுதல் சேவையை அளிக்கிறது.
புதிய திட்டங்கள் தற்போதைய 1.5 ஜிபி தினசரி தரவு திட்டங்களை விட மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகும். புதிய திட்டங்கள் 1,000 நிமிட offnet IUC நிமிடங்களுடன் இலவச தரவைக் கொண்டுள்ளன, இது பயனர்கள் தனித்தனியாக வாங்கினால் ரூ .80 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டங்களும் பழைய 2 ஜிபி தினசரி திட்டங்களை விட மலிவானவை. உதாரணமாக, ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு விதம் மூன்று மாதங்களுக்கு வேண்டும் பட்சத்தில் இப்போது ரூ .448 செலுத்துகிறோம், புதிய திட்டத்தில் இதற்கு பதிலாக ரூ .444 செலுத்தினால் போதுமானது. மேலும் 1,000 நிமிட offnet IUC கூடுதலாக கிடைக்கிறது. 2 மாத திட்டத்தில் பழையது ரூ .396 உடன் ஒப்பிடும்போது புதிய திட்டத்தில் ரூ .333 மட்டுமே செலவாகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, நிறுவனம் ஜியோ-வின் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய சிறிது நேரத்திலேயே ரிலையன்ஸ் ஜியோவின் 2 ஜிபி தினசரி திட்டங்களில் மாற்றங்கள் வந்துள்ளன என தெரிகிறது. நெட்வொர் விட்டு சென்ற வாடிக்கையாளர்களை மீண்டும் தன் நெர்வெர்கிற்கு ஈர்க்க இத்திட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.