iPhone 13-க்கு போட்டியாக களம் இறங்கியது Samsung-ன் அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன்

சாம்சங் இன்று அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனை, கடந்த ஆண்டின் Galaxy S21 ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் கூடுதல் வடிவமாக அறிமுகப்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 03:55 PM IST
  • சாம்சங்கின் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது.
  • வெள்ளை, கிராஃபைட், லாவெண்டர் மற்றும் ஆலிவ் ஆகிய நான்கு வண்ணங்களில் தொலைபேசி விற்பனை செய்யப்படும்.
  • இதில் AI- அடிப்படையிலான புளூ லைட் கண்ட்ரோல் உள்ளது.
 iPhone 13-க்கு போட்டியாக களம் இறங்கியது Samsung-ன் அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன் title=

புது தில்லி: பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, சாம்சங் இன்று அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனை, கடந்த ஆண்டின் Galaxy S21 ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் கூடுதல் வடிவமாக அறிமுகப்படுத்தியது. வெள்ளை, கிராஃபைட், லாவெண்டர் மற்றும் ஆலிவ் ஆகிய நான்கு வண்ணங்களில் தொலைபேசி விற்பனை செய்யப்படும். 

இந்த ஸ்மார்ட்போனை (Smartphone) ஜனவரி 11 முதல்,  $ 699 (ரூ 52 ஆயிரம்) என்ற ஆரம்ப விலையில் வாங்க முடியும். Samsung Galaxy S21 FE இன் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Samsung Galaxy S21 FE: விவரக்குறிப்புகள்

Samsung Galaxy S21 FE ஆனது 6.4-இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 2340 x 1080 பிக்சல்கள், 120Hz புதுப்பிப்பு வீதம், கேம் பயன்முறையில் 240Hz டச் சேம்பிளிங் வீதம் மற்றும் ஐ கம்ஃபோர்ட் ஷீல்டுக்கு AI- அடிப்படையிலான புளூ லைட் கண்ட்ரோல் ஆகியவற்றை வழங்குகிறது. 

ALSO READ | Offer! வெறும் ரூ.399க்கு Samsung இன் இந்த Smartphone ஐ வாங்க அறிய வாய்ப்பு

Samsung Galaxy S21 FE: ஸ்டோரேஜ் 

இந்த சாம்சங் (Samsung) சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஜி இணைப்பு சப்போர்ட்டைக் வழங்குகிறது. மெமரிக்காக, தொலைபேசியில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் ஃபோன் வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

Samsung Galaxy S21 FE: கேமரா

Samsung Galaxy S21 FE இல், f/1.8 துளையுடன் கூடிய 12-மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் f/2.2 சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் 30X ஸ்பேஸ் ஜூம் ஆதரவுடன் f/2.4 டெலிஃபோடோ சென்சார் ஆகியவை உள்ளன. 

ALSO READ | Flipkart Sale! கம்மி விலையில் 65 இன்ச் Nokia Smart TV விற்பனை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News