இந்தியாவில் சலுகை விற்பனையில் அறிமுகமாகும் Samsung Mobiles!

சலுகை விற்பனையில் இந்தியாவில் அறிமுகமாகிறது Galaxy Note10 மற்றும் Galaxy S10!

Last Updated : Oct 20, 2019, 03:37 PM IST
இந்தியாவில் சலுகை விற்பனையில் அறிமுகமாகும் Samsung Mobiles! title=

சலுகை விற்பனையில் இந்தியாவில் அறிமுகமாகிறது Galaxy Note10 மற்றும் Galaxy S10!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது பிரபலமான ஸ்மார்ட்போன்களான Galaxy Note10 மற்றும் Galaxy S10 வரிசையில் இந்தியாவில் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அக்டோபர் 31, 2019 வரை செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் படி சாம்சங் Galaxy Note10 வரிசை ரூ.12,000 வரை சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கும், Galaxy S10 வரிசை வாடிக்கையாளர்களுக்கு ரூ .14,000 வரை சலுகை விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தொடர்களிலிருந்தும் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் நுகர்வோர் சில்லறை விலையுடன் ஒப்பிடும்போது ரூ.3,000 நுகர்வோர் நன்மையுடன் ரூ.6,990 தள்ளுபடி விலையில் கேலக்ஸி பட்ஸையும், கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ரூ.13,990 விலையையும் ரூ.6,000 நுகர்வோர் நன்மையுடன் பெறலாம் என தெரிவிக்கிப்பட்டுள்ளது.

கூடுதலாக, Galaxy S10 தொடரில், நுகர்வோர் SBI கிரெடிட் கார்டுகள் மூலம் கூடுதலாக 5 சதவீத கேஷ்பேக் மற்றும் ரூ .5000 வரை உடனடி கேஷ்பேக் அம்சங்களையும் பெறலாம்.

Galaxy Note10-ல் நுகர்வோர் தங்கள் தொலைபேசியின் மாற்று விலைக்கு மேல் ரூ.6,000 போனஸ் அல்லது ரூ.6,000 SBI கேஷ்பேக் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News