சாம்சுங் கேலக்ஸி நோட் 8: சிறப்பம்சங்கள் பார்க்க!

Last Updated : Aug 24, 2017, 01:18 PM IST
சாம்சுங் கேலக்ஸி நோட் 8: சிறப்பம்சங்கள் பார்க்க! title=

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் நியூ யார்க் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. 

ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள நோட் 8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்ச்சிட் கிரே மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 துவக்க விலை 930 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு கியர் 360 கேமரா அல்லது சார்ஜிங் பன்டிள் கூடுதல் விலையின்றி வழங்கப்படும். 

கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்கள் நோட் 8 வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் குவாட் எச்டி+அமோலேட் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் 
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஐபி68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

Trending News