ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டும் நிறுவனம்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்

ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை ஹேக்கிங் செய்து பணத்தை சுருட்டும் தனியார் நிறுவனம் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2022, 07:13 PM IST
  • ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் கவனம்
  • ஹேக்கிங் செய்து மிரட்டும் தனியார் நிறுவனம்
ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டும் நிறுவனம்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் title=

Online Hacking: உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள தரவு பாதுகாப்பானது என்று நீங்கள் உணர்ந்தால், இது உங்கள் தவறான புரிதல். ஏனெனில் ஒரு நிறுவனத்தைப் பற்றி வெளிவந்துள்ள தகவல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்வோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவலுக்குப் பிறகும் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் கணினியில் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பானவை என்று நீங்கள் நினைத்தால், மறு பரிசீலனை செய்தவது நல்லது. 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை ஹேக் செய்யும் ஸ்பைவேர் நிறுவனம் இதனை ரகசியமாக செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த நிறுவனம் மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறது. அந்த நிறுவனம் நினைத்தால் எந்த ஒரு நபரின் ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப்களை ஹேக் செய்ய முடியுமாம். 

ஹேக் செய்யும் நிறுவனம்

இன்டெல்லெக்சா என்ற ஸ்பைவேர் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களை ஹேக் செய்கிறது. ஹேக் செய்த பிறகு அந்நிறுவனம் மக்களிடம் இருந்து பெரும் தொகையை வசூலிக்கிறது. கேட்கும் தொகையை கொடுத்துவிட்டால், அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுகிறார்கள். ஒரு ஹேக்கிங் செய்வதற்கு அந்த நிறுவனம் 64 கோடியை வசூலிக்கிறதாம். அதற்கு ஏற்றார்போல் உள்ள ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களை அந்த நிறுவனம் குறி வைப்பது இலக்காக வைத்துள்ளது. குறிப்பாக, சினிமா மற்றும் மிகப்பெரிய தொழில் பிரபலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புக்கு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC

மேலும் படிக்க | அழகான அந்தமானை சுற்றிப்பார்க்க அருமையான வாய்ப்பு! IRCTC-ன் சூப்பர் பேக்கேஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News