மக்களுக்குப் புதிய பிரச்சனை; கட்டணங்களை உயர்த்த காத்திருக்கும் Telecom சேவைகள்

பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை தொடர்ந்து தற்போது தொலைத் தொடர்பு சேவைகளும் விலை உயர்த்தப்போகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2021, 09:41 AM IST
மக்களுக்குப் புதிய பிரச்சனை; கட்டணங்களை உயர்த்த காத்திருக்கும் Telecom சேவைகள் title=

புதுடெல்லி: Telecom Services Tariff: பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை தொடர்ந்து தற்போது தொலைத் தொடர்பு சேவைகளும் விலை உயர்த்தப்போகிறது. 

கடுமையான அழுத்தத்தின் கீழ் தொலைத் தொடர்புத் துறை: மிட்டல்
இந்த நேரத்தில் தொலைத் தொடர்புத் துறை (Telecom Services) கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்று சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் கனவு அப்படியே இருப்பதையும், குறைந்தது மூன்று தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் நாட்டில் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்யும் என்று நாம் நம்புகிறேன். Vodafone Idea இன் மிக மோசமான முடிவுகளுக்கு ஒரு நாள் கழித்து சுனில் பாரதி மிட்டல் (Airtel) இந்த அறிக்கை வெளிவந்துள்ளது, இதில் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ .7,023 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறபட்டுள்ளது.

ALSO READ | Vi, BSNL, Jio: 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

கட்டணங்களை உயர்த்த தயங்கம் இருக்காது: மிட்டல்
தொலைத் தொடர்புத் துறை இப்போது அதன் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று சுனில் பாரதி மிட்டல் வலியுறுத்தினார், தேவைப்பட்டால் கட்டணங்களை அதிகரிக்க ஏர்டெல் தயங்காது என்றும் கூறியுள்ளார். இருப்பினும், கட்டணத்தை ஒருதலைப்பட்சமாக அதிகரிக்க முடியாது என்று மிட்டல் கூறினார்.

'குறைந்தது 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருக்க வேண்டும்'
இந்தியாவின் டிஜிட்டல் கனவு அப்படியே இருப்பதையும், குறைந்தது மூன்று தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் நாட்டில் இருப்பதையும் அதிகாரிகள் மற்றும் தொலைத் துறை உறுதி செய்யும். ஒன்வெப்பின் மெய்நிகர் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் சுனில் மிட்டல் இந்த விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். ஒன்வெப் என்பது பாரதி குளோபல் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Airtel வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; இந்த திட்டங்கள் அதிரடி நீக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News