புதுடெல்லி: டாடா மோட்டார்ஸ் அதன் சிறிய எஸ்யூவியான டாடா பஞ்ச் காரின் புதிய கேமோ பதிப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. மினி-எஸ்யூவிக்கான புதிய டிரெய்லரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீஸர் நிறம் பற்றிய தகவல்கள் எதையும் இந்த டிரெயிலர் வெளிப்படுத்தவில்லை, ஆனால் Safari Camo Editon போன்ற மற்ற Camo பதிப்புகளுக்கு ஏற்ப அடர் பச்சை வண்ணத்தில் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. டாடா பஞ்ச் ஏற்கனவே காசிரங்கா பதிப்பில் (Kaziranga Edition) வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சிறப்பு கேமோ பதிப்பை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது டாடா மோட்டார்ஸ்.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியில் பகிரப்பட்ட வீடியோவில், டாடா பஞ்ச் இரவு நேரத்தில் தெருக்களில் ஓடும் காட்சிகளைக் காட்டுகிறது.
மேலும் படிக்க | 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் 5 கதவு கார்கள்
பெரும்பாலான காட்சிகள் கவனிக்க முடியாத அளவுக்கு மங்கலாக இருந்தாலும், காரின் கேமோ பேட்ஜிங்கை கண்டுபிடிக்க முடிகிறது என்பது வீடியோவைப்ப் பார்த்தால் புரியும். டாடா மோட்டர்ஸ் நிறுவனம் பகிர்ந்த டிரெய்லர் வீடியோ...
Get ready to rumble with the #NoLimitsVibe!
The wait is almost over. Stay tuned.#VibesWithYou #PackAPUNCH #TataPUNCH #FastestFirst100K #TataMotorsPassengerVehicles #ComingSoon #2DaysToGo #SUV #SUVLife #CarsDaily pic.twitter.com/nAlTRN74Ui
— Tata Motors Cars (@TataMotors_Cars) September 20, 2022
டாடா பஞ்ச் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா KUV100 போன்றவற்றுக்கு எதிராக மினி-SUV பிரிவில் இந்த வாகனம் வருகிறது. புதிய பன்ச் கேமோ எடிஷன் பண்டிகைக் காலமான தற்போது அறிமுகமாகிறது. டாடா நிறுவனம் இந்த புதிய காரை, அறிமுகம் செய்த ஒரு மாதத்திற்குள் டெலிவரி கொடுக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Realme C33: ரூ.549-க்கு ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கலாம்; ஆனால் ஒரு கண்டிஷன்
Camo பதிப்பின் பிற தயாரிப்புகளான டார்க் எடிஷன், ஜெட் எடிஷன், கோல்ட் எடியன் மற்றும் காசிரங்கா எடிஷன் ஆகியவையும் நன்றாக விற்பனையாகிறது. சிறப்பு பதிப்புகளின் வெளியீடு பிராண்டின் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒரே வகையான கார்களில் பல பதிப்புகள் வெளியிடப்படுகின்றன.
டாடா பஞ்ச் இந்தியாவில் உருவாக்கப்படும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். குளோபல் NCAP விபத்து சோதனை நிறுவனம், ஐந்து நட்சத்திரங்களை இந்த காருக்கு வழங்கியுள்ளது. பாதுகாப்பைத் தவிர, Tata Punch ஆனது Apple CarPlay மற்றும் Android Autoக்கான ஆதரவுடன் இன்ஃபோடெயின்மென்ட் திரையையும் வழங்குகிறது. இந்த காரில் ஹர்மன் ஸ்பீக்கர்களும் உள்ளன.
மேலும் படிக்க | பைக்கில் பறப்பவரா? இனி பறக்கும் பைக்கிலேயே பறக்கலாம்! வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ